கைது செய்யப்பட்ட கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா.. என்ன நடந்தது?

கொரோனா விதிகளை மீறி செயல்பட்டதாகவும், கூட்டமாக கூடியதாகவும், இரவில் நீண்ட நேரம் கிளப்பில் இருந்ததாக கூறி இவர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா.. என்ன நடந்தது?

முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா மும்பையில் கைது செய்யப்பட்டு பின் பெயிலில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் வீரர் ரெய்னா ஓய்விற்கு பின் பல்வேறு கிரிக்கெட் சார்ந்த பணிகளை செய்து வருகிறார். ஜம்மு காஷ்மீரில் இருக்கும் இளைஞர்களுக்கு கிரிக்கெட் பயிற்சிகளை அளித்து வருகிறார்.

அதேபோல் அடுத்த வருடம் நடக்க உள்ள ஐபிஎல் தொடருக்கும் தற்போது ரெய்னா தயாராகி வருகிறார். கடந்த சில நாட்களாக இவர் இதற்காக மும்பையில் தங்கி இருக்கிறார்.

தன்னை பல்வேறு விஷயங்களில் பிசியாக வைத்துக் கொண்டு ரெய்னா நேற்று மும்பையில் கிளப் ஒன்றில் நடந்த மீட்டிங்கில் கலந்து கொண்டுள்ளார். பாலிவுட் பாடகர் குரு ரந்தவா மற்றும் ரெய்னாவின் நண்பர்கள் சிலர் இந்த கிளப்பில் நடந்த மீட்டிங்கில் கலந்து கொண்டு இருந்தனர்.

மும்பையில் உள்ள டிராகன் பிளை கிளப்பில் இவர் கைது செய்யப்பட்டார். ஆனால் கைது செய்யப்பட்ட ரெய்னா பெயிலில் விடுவிக்கப்பட்டார். கொரோனா விதிகளை மீறி செயல்பட்டதாகவும், கூட்டமாக கூடியதாகவும், இரவில் நீண்ட நேரம் கிளப்பில் இருந்ததாக கூறி இவர் கைது செய்யப்பட்டார்.

சட்டப்பிரிவு 188, 269, 34 கீழ் ரெய்னா உட்பட 34 பேர் கைது செய்யப்பட்டனர். கிளப்பில் பணியாற்றிய நபர்களும் கைது செய்யப்பட்டனர். அதன்பின் இவர்கள் சில மணி நேரத்தில் பெயிலில் விடுவிக்கப்பட்டனர். சுரேஷ் ரெய்னா இப்படி கைது செய்யப்பட்ட சம்பவம் பெரிய அளவில் வைரலாகி வருகிறது.