தலையில் கை வைத்தபடி உட்கார்ந்த சுந்தர்.. விடாமல் கத்திய ரோஹித்..  அதிர வைத்த சம்பவம்

இப்படிப்பட்ட நிலையில் இன்று பட்லர் விக்கெட் விழுந்த போதும் அதற்கு நடுவர் விக்கெட் கொடுக்கவில்லை. 165 ஓவரில் சுந்தர் வீசிய 4வது பந்தில் பட்லர் இன்சைட் எட்ஜாகி கேட்ச் கொடுத்தார். இதை பண்ட் பிடித்துவிட்டு விக்கெட் கேட்டார்.

தலையில் கை வைத்தபடி உட்கார்ந்த சுந்தர்.. விடாமல் கத்திய ரோஹித்..  அதிர வைத்த சம்பவம்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நடந்த சம்பவம் ஒன்று இந்திய வீரர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

இந்தியா இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் நடந்து வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியிலேயே சென்னையில் இங்கிலாந்து வீரர்கள் அதிரடி காட்டி வருகிறார்கள்.

அதிலும் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் 218 ரன்கள் எடுத்து இந்திய அணியை புரட்டி எடுத்துள்ளார். இங்கிலாந்து வீரர்களின் விக்கெட்டை எடுக்க முடியாமல் இந்திய பவுலர்கள் திணறி போனார்கள்.

இரண்டு நாட்களாக இந்திய வீரர்கள் பவுலிங் செய்து வருகிறார்கள். 170 ஓவர்களை இந்திய வீரர்கள் கடந்த இரண்டு நாட்களாக வீசினார்கள். இதனால் இந்திய வீரர்கள் கடுமையான மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.

இப்படிப்பட்ட நிலையில் பட்லர் விக்கெட் விழுந்த போதும் அதற்கு நடுவர் விக்கெட் கொடுக்கவில்லை. 165 ஓவரில் சுந்தர் வீசிய 4வது பந்தில் பட்லர் இன்சைட் எட்ஜாகி கேட்ச் கொடுத்தார். இதை பண்ட் பிடித்துவிட்டு விக்கெட் கேட்டார்.

ஆனால் நடுவர் விக்கெட் கொடுக்கவில்லை. இதையடுத்து ரோஹித் சர்மாவும் கத்தியபடி விக்கெட் என்று கேட்டார். ஆனால் நடுவர் விக்கெட் கொடுக்கவில்லை. இதனால் சுந்தர் தலையில் கைவைத்தபடி அப்படியே உட்கார்ந்து இருந்தார்.

விழுந்த விக்கெட்டை இப்படி கொடுக்காமல் போய் விட்டார்களே என்று சுந்தர் அதிர்ச்சி அடைந்தார். அதோடு இந்திய அணியிடம் ரிவ்யூவும் மிச்சம் இல்லை. இதனால் அதற்கு ரிவ்யூவும் கேட்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0