பொங்கி எழுந்து வார்த்தையை விட்ட ஆஸி. கேப்டன்.. சிட்னி டெஸ்டில் பரபரப்பு!

ஆனால், அதை மூன்றாவது அம்பயர் மறுக்கவே ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெயின் கோபத்தில் களத்தில் இருந்த அம்பயருடன் கோபமாக பேசினார்.

 பொங்கி எழுந்து வார்த்தையை விட்ட ஆஸி. கேப்டன்.. சிட்னி டெஸ்டில் பரபரப்பு!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் இந்திய வீரர் புஜாரா நிதான ஆட்டம் ஆடி அரைசதம் அடித்தார். அவர் 13 ரன்கள் எடுத்த நிலையில் கேட்ச் கொடுத்ததாக ஆஸ்திரேலியா ரிவ்யூ கேட்டது.

ஆனால், அதை மூன்றாவது அம்பயர் மறுக்கவே ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெயின் கோபத்தில் களத்தில் இருந்த அம்பயருடன் கோபமாக பேசினார்.

இந்தப் போட்டியில் முதல் இன்னிங்க்ஸ் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 338 ரன்கள் குவித்தது. அடுத்து இந்திய அணி பேட்டிங் செய்தது.

ஷுப்மன் கில் 50, ரோஹித் சர்மா 26 ரன்கள் குவித்தனர். அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 

புஜாரா மிக நிதான ஆட்டம் ஆடி அரைசதம் கடந்தார். அவர் 13 ரன்கள் எடுத்த நிலையில் அவர் கேட்ச் கொடுத்தாக் ஆஸ்திரேலியா ரிவ்யூ கேட்டது.

அப்போது மூன்றாவது அம்பயரால் அது அவுட் தானா என தெளிவாக கூற முடியவில்லை. அவர் கள அம்பயர் முடிவுக்கே அதை விட்டு விட்டார். அவர் அவுட் இல்லை என தீர்ப்பு அளித்தார். இதை அடுத்து ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெயின் கோபம் அடைந்தார்.

அவர் அம்பயர் வில்சனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அம்பயர் முடிவை நான் எடுக்கவில்லை. மூன்றாவது அம்பயர் தான் எடுத்தார் என பதிலடி கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. டிம் பெயின் மீண்டும், அது அவுட் தான் என கூறினார்.

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0