இந்த ரெண்டு அணிகள் கவனமா இருக்கணும்... பிசிசிஐ தலைவர் சொல்லிட்டாரே!

ஐபிஎல் 2021 தொடர் ஏப்ரல், மே மாதங்களில் துவங்கவுள்ளதாகவும் இந்தியாவிலேயே இந்த தொடர் நடைபெற சாத்தியங்கள் அதிகமாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த ரெண்டு அணிகள் கவனமா இருக்கணும்... பிசிசிஐ தலைவர் சொல்லிட்டாரே!

ஐபிஎல் 2021 தொடர் ஏப்ரல், மே மாதங்களில் துவங்கவுள்ளதாகவும் இந்தியாவிலேயே இந்த தொடர் நடைபெற சாத்தியங்கள் அதிகமாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதற்கான ஏலம் நாளை சென்னையில் சிறிய அளவில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த ஏலத்தில் இரண்டு ஐபிஎல் அணிகள் சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயம் குறித்து பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

முன்னதாக 8 ஐபிஎல் அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை தக்க வைத்தும் சில வீரர்களை விடுவித்தும் உள்ளன. 

மேலும் ஐபிஎல் ஏலத்தை எதிர்கொள்ளும் வகையில் தங்களிடம் போதிய நிதியை கையிருப்பில் வைத்துள்ளன.

கடந்த ஐபிஎல் 2020 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் சிறப்பான செயல்பாட்டை அளிக்கவில்லை. 

அந்த அணிகளால் ப்ளே-ஆப் சுற்றிற்கும் முன்னேற முடியவில்லை. இந்நிலையில் இந்த இரு அணிகளும் ஐபிஎல் 2021 ஏலத்தின்போது சிறப்பாக செயல்பட்டு தங்களை பலப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி குறிப்பிட்டுள்ளார்.

ஐபிஎல்லில் 3 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள முன்னாள் கேப்டன் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி அம்பத்தி ராயுடு, சரண் சர்மா உள்ளிட்ட முக்கிய வீரர்களை தக்கவைத்தும் முரளி விஜய், கேதார் ஜாதவ் உள்ளிட்ட வீரர்களை விடுவித்தும் கணிசமான தொகையுடன் இந்த ஏலத்தை எதிர்கொள்ளவுள்ளது.

இதேபோல கொல்கத்தா நைட் ரைடர்சும் மார்கன், தினேஷ் கார்த்திக், சுப்மன் கில், வருண் சக்ரவர்த்தி, ஆன்ட்ரே ரஸ்ஸல் உள்ளிட்ட வீரர்களை தக்க வைத்தும் டாம் பான்டன், கிறிஸ் கிரீன் உளிளட்ட வீரர்களை விடுவித்தும் இந்த ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்க உள்ளது.