அவங்க இஷ்டத்துக்கு என்ன வேணா செய்யலாமா... ஐசிசியையே விளாசிய மைக்கேல் வாகன்

இந்நிலையில் இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வாகன், ஒரு படி மேல் சென்று ஐசிசியே ஒருதலை பட்சமாக செயல்படுவது போல் கடும் குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

அவங்க இஷ்டத்துக்கு என்ன வேணா செய்யலாமா... ஐசிசியையே விளாசிய மைக்கேல் வாகன்

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இதில் இந்தியாவுக்கு சாதகமாக பிட்ச் அமைக்கப்பட்டதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இந்நிலையில் இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வாகன், ஒரு படி மேல் சென்று ஐசிசியே ஒருதலை பட்சமாக செயல்படுவது போல் கடும் குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

அகமதாபாத்தில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டி இரண்டே நாட்களில் முடிவடைந்தது. இப்போட்டியில் ஸ்பின்னர்களே ஆதிக்கம் செலுத்தியிருந்தனர். 
இதனால் இந்திய அணிக்கு சாதகமாக பிட்ச் தயார் செய்யப்பட்டதாக இங்கிலாந்து முன்னாள் வீரர்கள் குற்றச்சாட்டு தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து பேசியுள்ள மைக்கேல் வாகன், இந்தியா போன்ற பலமான நாடுகளை கேள்வி கேட்க பல் இல்லாத அமைப்பாக ஐசிசி செயல்படுகிறது. 
இந்தியா அவர்களுக்கு ஏற்றார் போல் எப்படிப்பட்ட பிட்சையும் தயார் செய்கிறது. அது டெஸ்ட் கிரிக்கெட்டின் தரம் கெடுகிறது என தெரிவித்துள்ளார்.

போட்டியை நேரலை செய்த தொலைக்காட்சி நிறுவனங்கள் பணத்தை திரும்ப கேட்க வாய்ப்புகள் உள்ளது. இரண்டே நாட்களில் போட்டி முடிவடைந்திருப்பதால் அடுத்த டெஸ்ட் போட்டிகளில் பணத்தை செலவளிக்க யோசிப்பார்கள். இதனால் டெஸ்ட் போட்டிக்கு பாதிப்பு ஏற்படும் என தெரிவித்தார்.

இந்தியா தனக்கு சாதகமான பிட்சை தயாரிக்கிறது. என்னை பொறுத்தவரை இந்தப் போட்டியில் வெற்றியாளர் என யாரும் இல்லை. இந்தியா திறமையை வெளிப்படுத்தியது என்பதை மறுக்க முடியாது. 

ஆனால் இங்கிலாந்து அணியை விட திறமை வாய்ந்தவர்கள் என கூறுவதை என்னால் ஏற்க முடியாது. என்னைப் போன்ற முன்னாள் வீரர்கள் இதற்காக கேள்விகளை எழுப்புவோம் என தெரிவித்துள்ளார்.