தம்புள்ள வைக்கிங்கிடம் வீழ்ந்தது கண்டி டஸ்கர்ஸ்
உபுல் தரங்க 19 ஓட்டங்களையும், தனுஸ்க குணதிலக 33 ஓட்டங்களையும் பெற தம்புள்ள வைகிங் அணி 19.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கை அடைந்தது.
எல்.பி.எல் இருபது 20 கிரிக்கெட் தொடரில் தம்புள்ள வைகிங் அணி தனது மூன்றாவது வெற்றியைப் பெற்றது. போட்டியில் கண்டி டஸ்கர்ஸ் அணியை 5 விக்கெட்டுகளால் தம்புள்ள அணி வெற்றிகொண்டது.
மின்னொளியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கண்டி டஸ்கர்ஸ் அணி ஆரம்பத்தில் சிறப்பாக ஓட்டங்களைப் பெற்றது.
முதல் விக்கெட் 33 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டாலும் குசல் ஜனித் பெரேரா 41 ஓட்டங்களையும், குசல் மென்டிஸ் 55 ஓட்டங்களையும் பெற்று ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர்.
பிரென்டன் டெய்லர் 13 ஓட்டங்களையும், தனுஸ்க குணதிலக 18 ஓட்டங்களையும் பெற்று அணியை சவாலான நிலைக்கு கொண்டுவந்தனர்.
கண்டி டஸ்கர்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 6 விக்கெட் இழப்புக்கு 156 ஓட்டங்களைப் பெற்றது. கசுன் ராஜித, மிலிந்த புஸ்பகுமார ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
157 ஓட்டங்களை நோக்கிப பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தம்புள்ள வைகிங் அணியின் ஏஞ்சலோ பெரேரா 3 சிக்ஸர்கள், 5 பௌண்டரிகளுடன் 67 ஓட்டங்களைப் பெற்றார்.
உபுல் தரங்க 19 ஓட்டங்களையும், தனுஸ்க குணதிலக 33 ஓட்டங்களையும் பெற தம்புள்ள வைகிங் அணி 19.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கை அடைந்தது. புள்ளிகள் பட்டியலில் தம்புள்ளை வைகிங் அணி 6 புள்ளிகளுடன் இரண்டாமிடத்திலுள்ளது.