லண்டன் ஓவல் டெஸ்ட்: அஷ்வினுக்கு இடம் இல்லை

இந்திய அணியில் இஷாந்த் சர்மா, முகமது ஷமி நீக்கப்பட்ட நிலையில் உமேஷ் யாதவ், ஷர்துல் தாகூர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

லண்டன் ஓவல் டெஸ்ட்: அஷ்வினுக்கு இடம் இல்லை

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. 

முதல் மூன்று போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி மூலம் 1-1 என சமநிலையில் உள்ளது. ஒரு டெஸ்ட் டிராவில் முடிந்தது.

இந்த நிலையில் 4-வது டெஸ்ட் லண்டன் ஓவலில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். 

இந்திய அணியில் இஷாந்த் சர்மா, முகமது ஷமி ஆகியோர் நீக்கப்பட்டு உமேஷ் யாதவ், ஷர்துல் தாகூர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அஷ்வினுக்கு இந்த போட்டியிலும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0