நான் எடுக்குறதுதான் முடிவு.. ஷரத்துல் தாக்கூரை வீட்டுக்கு அனுப்பிய கோலி.. பகீர் சம்பவம்!

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி 20 தொடரில் ஷரத்துல் தாக்கூர் மிகவும் சிறப்பாக பவுலிங் செய்தார். அதன்பின் டெஸ்ட் தொடரில் பவுலிங் மற்றும் பேட்டிங் இரண்டிலும் தாக்கூர் அசத்தினார்.

நான் எடுக்குறதுதான் முடிவு.. ஷரத்துல் தாக்கூரை வீட்டுக்கு அனுப்பிய கோலி.. பகீர் சம்பவம்!

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் ஸ்குவாடில் இருந்து திடீரென ஷரத்துல் தாக்கூரை கோலி நீக்கி இருக்கிறார்.

இந்தியா இங்கிலாந்து இடையிலான கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 

டெஸ்ட் உலகக் கோப்பை தொடருக்கு தேர்வாக வேண்டும் என்பதால் இந்திய அணி தற்போது டெஸ்ட் போட்டிகளில் கவனம் செலுத்தி வருகிறது.

சென்னையில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில் அஹமதாபாத்தில் அடுத்த டெஸ்ட் போட்டி நடக்க உள்ளது. இதுவரை நடந்த இரண்டு டெஸ்ட் போட்டியில் ஒன்றில் இங்கிலாந்து அணியும், இரண்டாவது டெஸ்டில் இந்திய அணியும் வென்றுள்ளது.

இந்த நிலையில் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்டுக்கான அணியில் இருந்து ஷரத்துல் தாக்கூரை கோலி நீக்கி இருக்கிறார். உமேஷ் யாதவ் மீண்டும் அணிக்குள் வர உள்ளதால் இவர் நீக்கப்பட்டுள்ளார். தாக்கூரின் நீக்கம் அணிக்குள் பெரிய அளவில் கேள்விகளை எழுப்பி உள்ளது.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி 20 தொடரில் ஷரத்துல் தாக்கூர் மிகவும் சிறப்பாக பவுலிங் செய்தார். அதன்பின் டெஸ்ட் தொடரில் பவுலிங் மற்றும் பேட்டிங் இரண்டிலும் தாக்கூர் அசத்தினார்.

கடைசி டெஸ்டில் கப்பாவில் இந்தியா வெற்றிபெற முதல் இன்னிங்சில் தாக்கூர் அடித்த 60+ ரன்கள் முக்கிய காரணமாக இருந்தது.

பேட்டிங், பவுலிங் இரண்டிலும் தாக்கூர் சிறப்பாக ஆடினார். ஆனாலும் இப்போது திடீரென இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் ஸ்குவாடில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். 

அதோடு இவரை அணியோடு இருக்கும்படியும் கூறவில்லை . இவரை விஜய் ஹசாரே கோப்பை தொடருக்கு அனுப்பி உள்ளனர். இதனால் இங்கிலாந்துக்கு எதிரான லிமிடட் ஓவர் போட்டிகளில் இவர் ஆடுவதும் சந்தேகம் ஆகியுள்ளது.

இவர் விஜய் ஹசாரே கோப்பை போட்டிக்கு சென்றுள்ளதால் மீண்டும் அணிக்கு வருவாரா என்று கேள்வி உள்ளது. நன்றாக ஆடும் வீரரை திடீரென சமயங்களில் கோலி ஓரம்கட்டுவார்.

அப்படித்தான் இப்போது ஷரத்துல் தாக்கூரும் ஓரம்கட்டப்பட்டு இருக்கிறார். அவர் முடிவில் யாரும் தலையிடுவது கோலிக்கு பிடிக்காது. இந்த நிலையில் ஷரத்துல் தாக்கூருக்கு ஆதரவாகவும் அணி தேர்வில் யாரும் குரல் கொடுக்க வாய்ப்பு இல்லை என்கிறார்கள்.