ஐபிஎல் அணிகளுக்கு செக்... ஏலத்தில் 5 புதிய நிபந்தனைகள்... புதிய அறிவிப்பு!

அணிகள் அனைத்தும் 2020ம் ஆண்டை போல தங்களுக்கென அனுமதிக்கப்பட்டுள்ள ரூ.85 கோடிக்குள் தான் வீரர்களை ஏலம் எடுக்க வேண்டும். 

ஐபிஎல் அணிகளுக்கு செக்... ஏலத்தில் 5 புதிய நிபந்தனைகள்... புதிய அறிவிப்பு!

ஐபிஎல் 2021 இந்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் இந்தியாவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஏலம் பிப்ரவரி 18ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. இதுவரை 1097 வீரர்கள் ஏலத்திற்காக பதிவு செய்துள்ளனர்.

அணி நிர்வாகங்கள் வீரர்களை தேர்ந்தெடுக்க தயாராகி வரும் நிலையில், ஏலம் எடுப்பதில் அனைத்து அணிகளுக்கும் புதிய 5 நிபந்தனைகளை விதித்துள்ளது ஐ.பி.எல் கவுன்சில்.

அணிகள் அனைத்தும் 2020ம் ஆண்டை போல தங்களுக்கென அனுமதிக்கப்பட்டுள்ள ரூ.85 கோடிக்குள் தான் வீரர்களை ஏலம் எடுக்க வேண்டும். 

இதனிடையே அனைத்து அணிகளும் தக்கவைக்கும் வீரர்களை ஜன.20ம் தேதி முடிவு செய்துவிட்டது. எனினும் வீரர்களை விடுவிக்க பிப்.11ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.

ஒவ்வொரு அணியும் வைத்துள்ள மீத தொகை: சி.எஸ்.கே ( 19.9 கோடி), டெல்லி ( `12.9கோடி), பஞ்சாப் (53.2 கோடி), மும்பை ( 15.35 கோடி ), ராஜஸ்தான் ( 34.85 கோடி ), பெங்களூரு ( 35.9 கோடி) ஐதராபாத் (10.75 கோடி) கொல்கத்தா ( 10.75 கோடி)

இந்தாண்டு மினி ஐ.பி.எல் ஏலம் நடைபெறுவதால் Right ot Match Card ஐ பயன்படுத்த முடியாது. RTM என்பது 3 ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் மெகா ஏலத்தில் அணிகள் தாங்கள் விடுவித்த வீரரை மீண்டும் பழைய தொகைக்கே ஏலம் எடுத்துக்கொள்ளலாம். இந்த முறையினால் மற்ற அணிகளுடனான ஏல போட்டி குறையும்.

ஓவ்வொரு அணியும் அதிகபட்சமாக 25 வீரர்கள் வரை அணியில் வைத்துக்கொள்ளலாம். குறைந்தபட்சமாக ஓவ்வொரு அணியும் 18 வீரர்களை கட்டாயம் அணியில் வைத்திருக்க வேண்டும்.

அனைத்து அணிகளும் குறைந்தது 17 இந்திய வீரர்களை அணியில் வைத்துக்கொள்ளலாம். அதிகபட்சமாக 25 வீரர்கள் வரை உள்நாட்டில் இருந்து ஏலம் எடுத்துக்கொள்ளலாம்.

ஐ.பி.எல் தொடரில் வெளிநாட்டு வீரர்களின் பங்கு மிக முக்கியமானதாக இருந்து வருகிறது. சில அணிகளில் வெளிநாட்டு வீரர்கள்தான் தலைவராக உள்ளனர். 

இந்நிலையில் ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 8 வீரர்கள் வரை அணியில் சேர்த்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக, கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டித்தொடர், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்றது, 

இந்த ஆண்டு இது எங்கு ஏற்பாடு செய்யப்படும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியாத நிலையில் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி இந்த ஆண்டு ஐ.பி.எல்- ஐ இந்தியாவில் நடத்த வேண்டும் என விரும்புகிறார்.

like
0
dislike
0
love
0
funny
0
angry
1
sad
0
wow
0