பாகிஸ்தானை வீழ்த்தியது நியூஸிலாந்து

புஹீம் அஷ்ராப் 3 சிக்ஸர்கள், 2 பௌண்டரிகளுடன் 31 ஓட்டங்களையும், இமாட் வசிம் 19 ஓட்டங்களையும் பெற்றனர். பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 153 ஓட்டங்களைப் பெற்றது.

பாகிஸ்தானை வீழ்த்தியது நியூஸிலாந்து

பாகிஸ்தானுக்கு எதிரான சர்வதேச இருபது 20 கிரிக்கெட் தொடரை நியூஸிலாந்து அணி வெற்றிகரமாக ஆரம்பித்துள்ளது. முதல் போட்டியை நியூஸிலாந்து அணி 5 விக்கெட்டுகளால் வெற்றிகொண்டது.

ஒக்லன்டில் நடைபெற்ற இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. அணித்தலைவர் சஹதத் கான் 42 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றார். இதன்போது அவர் 3 சிக்ஸர்கள், 2 பௌண்டரிகளை விளாசினார்.

புஹீம் அஷ்ராப் 3 சிக்ஸர்கள், 2 பௌண்டரிகளுடன் 31 ஓட்டங்களையும், இமாட் வசிம் 19 ஓட்டங்களையும் பெற்றனர். பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 153 ஓட்டங்களைப் பெற்றது.

பாகிஸ்தான் அணியின் முதல் 5 விக்கெட்டுகளும் 39 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்ட நிலையில், இந்த ஓட்ட எண்ணிக்கையைக் குவித்து சவால் விடுத்தது. ஜேகப் டபி 4 விக்கெட்டுகளையும், ஸ்கொட் குஜெலின் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

154 ஓட்டங்களை நோக்கி பதிலளித்தாடிய நியூஸிலாந்து அணி 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது. எனினும், டிம் ஸெப்ரட் 57 ஓட்டங்களையும், மர்க் செம்பன் 34 ஓட்டங்களையும் பெற்று வெற்றியை இலகுவாக்கினர்.

நியூஸிலாந்து அணி 18.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு வெற்றியை இலகுவாக அடைந்தது. இந்த வெற்றிக்கு அமைவாக 3 போட்டிகள் கொண்ட சர்வதேச இருபதுக்கு20 தொடரில் ஒன்றுக்கு பூஜ்ஜியம் என முன்னிலை பெற்றது.

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0