முதலிடத்தை கெட்டியாக பிடித்த ஆஷ்லீ பார்டி

பிரிஸ்பேன் போட்டியில் பங்கேற்ற ஜப்பானை சேர்ந்த நயோமி ஒசாகா புள்ளிகளை தவறவிட்டதால் தன்னுடைய இடத்தை சிமோனா ஹாலேக்கிற்கு விட்டுக் கொடுத்துள்ளார். 

முதலிடத்தை கெட்டியாக பிடித்த ஆஷ்லீ பார்டி

ஆண்டின் முதல் டபள்யூ.டி.ஏ. தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில் ஆஸ்திரேலியாவின் ஆஷ்லீ பார்டி தொடர்ந்து முதலிடத்தில் நிலைகொண்டுள்ளார். 

ரோமானிய டென்னிஸ் வீராங்கனை சிமோனா ஹாலெக் எந்த போட்டிகளிலும் பங்கேற்காமலேயே 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். 

பிரிஸ்பேன் போட்டியில் பங்கேற்ற ஜப்பானை சேர்ந்த நயோமி ஒசாகா புள்ளிகளை தவறவிட்டதால் தன்னுடைய இடத்தை சிமோனா ஹாலேக்கிற்கு விட்டுக் கொடுத்துள்ளார். 

டென்னிஸ் வீராங்கனைகளின் பட்டியல் டபள்யூ.டி.ஏ.வின் டென்னிஸ் வீராங்கனைகளுக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. 

இந்த ஆண்டிற்கான முதல் தரவரிசை பட்டியல் இது. முதலிடத்தை தக்கவைத்த ஆஷ்லீ பார்டி இந்த பட்டியலில் ஆஸ்திரேலியாவின் ஆஷ்லீ பார்டி தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார். 

கடந்த ஆண்டில் பிரெஞ்ச் ஓபன், டபள்யூ.டி.ஏ. இறுதிப்போட்டிகளில் வெற்றி பெற்று முதலிடத்தில் தொடர்ந்திருந்த இவர், 7851 புள்ளிகள் பெற்று இந்த ஆண்டும் முதலிடத்தில் நீடித்துள்ளார். 

2வது ஆஸ்திரேலிய நம்பர்.1 வீராங்கனை கடந்த 1976ல் ஆஸ்திரேலிய வீராங்கனை எவோன் கூலாகாங் கவ்லி நம்பர் ஒன் இடத்தை பிடித்த நிலையில், அதன்பிறகு தரவரிசையில் முதலிடத்தை ஆஷ்லீ பார்டி தற்போது பிடித்துள்ளார்.