எல்.பிஎல் தொடரில் யாழ்ப்பாண அணிக்கு முதல் தோல்வி

ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி சார்பாக யாழ். மத்திய கல்லூரியின் விஜயகாந்த் வியாஸ்கான் பங்கேற்றார். இதன்மூலம் சர்வதேச தரத்திலான கிரிக்கெட் போட்டி ஒன்றில் பங்கேற்ற முதல் வட மாகாண அணி வீரராக அவர் பதிவானார்.

எல்.பிஎல் தொடரில் யாழ்ப்பாண அணிக்கு முதல் தோல்வி

எல்.பி.எல் இருபது20 கிரிக்கெட் தொடரில் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி முதல் தோல்வியைத் தழுவியது. போட்டியில் கொழும்பு கிங்ஸ் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

போட்டியில் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி சார்பாக யாழ். மத்திய கல்லூரியின் விஜயகாந்த் வியாஸ்கான் பங்கேற்றார். இதன்மூலம் சர்வதேச தரத்திலான கிரிக்கெட் போட்டி ஒன்றில் பங்கேற்ற முதல் வட மாகாண அணி வீரராக அவர் பதிவானார்.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 148 ஓட்டங்களைப் பெற்றது.

அவிஸ்க பெர்னாண்டோ 26 ஓட்டங்களையும், மினோத் பானுக 21 ஓட்டங்களையும், வனிந்து ஹசரங்க 41 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றனர்.

ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 148 ஓட்டங்களைப் பெற்றது.

புந்துவீச்சில் குவிஸ் அஹமட் 3 விக்கெட்டுகளையும், துஸ்மந்த சமீர 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

149 ஓட்டடங்களை நோக்கி பதிலளித்தாடிய கொழும்பு கிங்ஸ் அணி சார்பாக டினேஸ் சந்திமால் 68 ஓட்டடங்களைப் பெற்றார்.

அணித்தலைவர் ஏஞ்சலோ மெத்தியூஸ் 22 ஓட்டங்களையும், ஆன்ரு ரஞல் 32 ஓட்டடங்களையும் ஆட்டமிக்காமல் பெற்று வெற்றியை உறுதிசெய்தனர்.

கொழும்பு கிங்ஸ் அணி 19.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு வெற்றியை அடைந்தது.

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0