எல்.பி.எல் இருபது20 கிரிக்கெட் தொடரில் முதலிடத்தைப் பிடித்தது கொழும்பு

அரைஇறுதிப் போட்டிகள் எதிர்வரும் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதுடன் இறுதிப் போட்டி 16 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

எல்.பி.எல் இருபது20 கிரிக்கெட் தொடரில் முதலிடத்தைப் பிடித்தது கொழும்பு

எல்.பி.எல் இருபது 20 கிரிக்கெட் தொடரில் லீக் சுற்றில் ஏஞ்சலோ மெத்யூஸ் தலைமையிலான கொழும்பு கிங்ஸ் அணி முதலிடத்தைப் பிடித்துள்ளது. அவர்கள் 8 போட்டிகளில் 6 வெற்றிகளுடன் 12 புள்ளிகளைப் பெற்றுள்ளார்கள்.

தம்புள்ள வைகிங் அணிக்கு எதிரான போட்டியில் கொழும்பு கிங்ஸ் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தம்புள்ள வைகிங் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 203 ஓட்டங்களைக் குவித்தது.

நிரோஸன் திக்வெல்ல 65 ஓட்டங்களையும், ஏஞ்சலோ பெரேரா 74 ஓட்டங்களையும், அணித்தலைவர் தசுன் ஸானக 28 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றனர்.

50 ஓட்டங்களுக்கு 2 விக்கெட் வீழ்த்தப்பட்ட போதிலும் ஏனைய வீரர்கள் பிரகாசித்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர்.

கடினமான இலக்கான 204 ஓட்டங்களை நோக்கி பதிலளித்தாடிய கொழும்பு கிங்ஸ் அணியின் முதல் விக்கெட் 20 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டது. டினேஸ் சந்திமால் 3 ஓட்டங்களுடன் நடையைக்கட்டினார்.

லோவ்ரி இவென்ஸ் 24 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 5 பௌண்டரிகளுடன் 53 ஓட்டங்களையும், அஸான் பிரியஞ்சன் 47 ஓட்டங்களையும், தீக்ஸனா சில்வா 31 ஓட்டங்களையும், குவிஸ் அஹமட் 50 ஓட்டங்களையும் பெற்றனர்.

கொழும்பு கிங்ஸ் அணி 18.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு வெற்றியை எட்டியது. எவ்வாறாக இருந்தாலும் இந்த இரண்டு அணிகளும் ஏற்கனவே அரை இறுதியை உறுதிசெய்துள்ளன.

அரைஇறுதிப் போட்டிகள் எதிர்வரும் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதுடன் இறுதிப் போட்டி 16 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.