பேஸ்புக்கில் கடைசி வீடியோ.. தோனி படத்தில் நடித்த இன்னொரு நடிகரும் தற்கொலை..

சந்தீப் நாகர் தற்கொலைக்கு முன், பேஸ்புக்கில் தான் தற்கொலை செய்து கொள்ள போவதாக வீடியோ வெளியிட்டு இருக்கிறார். எம்.எஸ் தோனி படத்தில் சந்தீப் நாகர், சுஷாந்த் சிங்கிற்கு நண்பனாக நடித்து இருந்தார். நிறைய பாலிவுட் படங்களில் இவர் நடித்துள்ளார்.

பேஸ்புக்கில் கடைசி வீடியோ.. தோனி படத்தில் நடித்த இன்னொரு நடிகரும் தற்கொலை..

எம்.எஸ் தோனி படத்தில் நடித்த இளம் நடிகர் சந்தீப் நாகர் நேற்று தற்கொலை செய்து கொண்டார்.மும்பையில் இருக்கும் இவருடைய வீட்டில் சடலமாக இவர் கண்டுபிடிக்கப்பட்டார்.

இந்திய அணியின் முன்னாள் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவான படம் எம்.எஸ் தோனி. இந்த படம் இந்தியளவில் ஹிட் அடித்த படம் ஆகும்.

இந்த நிலையில் இந்த படத்திற்கு தொடர்புடைய நடிகர்கள் 3 பேர் வரிசையாக 2 வருடத்தில் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டு உள்ளனர். இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் நடிப்பில் இந்த படம் வெளியானது. அந்த படத்தில் சுஷாந்த் சிங் பணியாற்றிய போது அவருக்கு மேனேஜராக இருந்தவர் திஷா சலின் என்ற பெண். கடந்த வருட தொடக்கத்தில் இவர் தன்னுடைய வீட்டு மாடியில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.

இதற்கான காரணமாக முழுமையாக தெரியவில்லை. இந்த நிலையில் சில மாதங்களில் சுஷாந்த்சிங் இதேபோல் தற்கொலை செய்துகொண்டார். கடந்த வருடம் ஜூன் மாதம் சுஷாந்த்சிங் தனது மும்பை வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். 

வீட்டு அறையில் தூக்கு மாட்டி இவர் தற்கொலை செய்து கொண்டார். இவரின் தற்கொலைக்கும் இன்னும் முழுமையான காரணம் தெரியவில்லை.

சுஷாந்த் சிங் தன்னுடைய மனஅழுத்தத்திற்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார். அவர் 6 மாதமாக மன அழுத்தத்திற்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார். . இதன் காரணமாக அவர் தற்கொலை செய்து இருக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால் இதில் உண்மையான பின்னணி என்ன என்று இன்னும் தெரியவில்லை.

இந்த நிலையில் எம்.எஸ் தோனி படத்தில் நடித்த இளம் நடிகர் சந்தீப் நாகர் நேற்று தற்கொலை செய்து கொண்டார்.மும்பையில் இருக்கும் இவருடைய வீட்டில் சடலமாக இவர் கண்டுபிடிக்கப்பட்டார். 

தன்னுடைய வீட்டில் இவர் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டு இருக்கிறார். இப்போது இவருடைய மரணத்திற்கும் என்ன காரணம் என்று தெரியவில்லை. 

சந்தீப் நாகர் தற்கொலைக்கு முன், பேஸ்புக்கில் தான் தற்கொலை செய்து கொள்ள போவதாக வீடியோ வெளியிட்டு இருக்கிறார். எம்.எஸ் தோனி படத்தில் சந்தீப் நாகர், சுஷாந்த் சிங்கிற்கு நண்பனாக நடித்து இருந்தார். நிறைய பாலிவுட் படங்களில் இவர் நடித்துள்ளார்.

இவரின் தற்கொலைக்கும் மனஅழுத்தம் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் நடித்த, படத்தோடு தொடர்புடைய மூன்று பேர் அடுத்தடுத்து இப்படி தற்கொலை செய்து கொண்டது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த தற்கொலைக்கு என்ன காரணமாக இருக்கும் என்று கேள்வி எழுந்துள்ளது.

மூன்று பேரின் தற்கொலைக்கும் சரியான காரணம் தெரியாதது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கிரிக்கெட் ரசிகர்கள் பலர் நேற்று இணையத்தில் இது தொடர்பாக வருத்தத்தை தெரிவித்து டிவிட் செய்துள்ளனர்.