தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்க கடும் பயிற்சியை ஆரம்பித்த இந்திய வீரர்கள்!

மனைவிக்கு தலைப்பிரசவம் நடைபெற இருப்பதால் அவர் இந்தியாவுக்கு திரும்பிச் சென்றுள்ளதுடன் இதனால் எஞ்சிய மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியின் தலைவராக அஜின்கெயா ரஹானே செயற்படவுள்ளார்.

தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்க கடும் பயிற்சியை ஆரம்பித்த இந்திய வீரர்கள்!

இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் மெல்போர்னில் பயிற்சிகளை ஆரம்பித்துள்ளனர். அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் அடைந்த தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் இந்திய அணி வீரர்கள் கடும் பயிற்சிகளில் ஈடுபடுகின்றனர்.

இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பொக்ஸிங் டே என வர்ணிக்கப்படும் நத்தார் பண்டிகையின் மறுநாள் மெல்போர்னில் ஆரம்பமாகவுள்ளது. இந்தப் போட்டியில் அணித்தலைவர் விராத் கோஹ்லி பங்கேற்கமாட்டார்.

மனைவிக்கு தலைப்பிரசவம் நடைபெற இருப்பதால் அவர் இந்தியாவுக்கு திரும்பிச் சென்றுள்ளதுடன் இதனால் எஞ்சிய மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியின் தலைவராக அஜின்கெயா ரஹானே செயற்படவுள்ளார்.

முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு முற்றுப் புள்ளி வைத்து தொடரில் சவால் விடுக்க வேண்டுமானால் இந்திய அணி இரண்டாவது போட்டியில் வெற்றிபெற்றாக வேண்டும். அதனை இலக்கு வைத்து இந்திய அணி வீரர்கள் கடும் பயிற்சிகளை மேற்கொள்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.