ஒலிம்பிக் 2020.. துடுப்பு படகு போட்டியில் நெதர்லாந்த் சாதனை.. 9 வருட ரெக்கார்ட் முறியடிப்பு!
ஒலிம்பிக் 2020 தொடரில் முதல் கட்டமாக இன்று துடுப்பு படகு போட்டியின் பல்வேறு பிரிவு ஆட்டங்கள் நடைபெற்றது.
இன்று ஒலிம்பிக் துடுப்பு படகு போட்டியின் ஆண்கள் இரட்டை பிரிவு தகுதி சுற்றில் நெதர்லாந்தின் மெல்வின் டிவெல்லார், ஸ்டெப் போர்னிக் புதிய ரெக்கார்ட் படைத்து உள்ளனர். 9 வருட சாதனையை இன்று அவர்கள் முறியடித்தனர்.
ஒலிம்பிக் 2020 தொடரில் முதல் கட்டமாக இன்று துடுப்பு படகு போட்டியின் பல்வேறு பிரிவு ஆட்டங்கள் நடைபெற்றது. தகுதி போட்டிகள், முதல் சுற்று போட்டிகள் இதில் நடைபெற்றது. துடுப்பு படகு போட்டிகள் பல்வேறு கட்டங்களாக இந்த தொடரில் நடக்க உள்ளது.
பல்வேறு சுற்று ஆட்டங்களுக்கு பிறகு ஜூலை 30ம் தேதி இறுதிப்போட்டிகள் அனைத்து பிரிவிலும் நடக்க உள்ளது. இன்று முதல் கட்டமாக பெண்கள், ஆண்கள் பிரிவில் 6 தகுதி சுற்றி ஹீட் போட்டிகள் நடைபெற்றன.
இன்று துடுப்பு படகு போட்டியில் பின்வரும் போட்டிகள் நடைபெற்றன.
பெண்கள் சிங்கிள் ஸ்கல்ஸ் ஹீட் 6 தகுதி சுற்றுகள்.
ஆண்கள் சிங்கிள் ஸ்கல்ஸ் ஹீட் 6 தகுதி சுற்றுகள்.
ஆண்கள் டபுள் ஸ்கல்ஸ் ஹீட் 3 தகுதி சுற்றுகள்.
பெண்கள் டபுள் ஸ்கல்ஸ் ஹீட் 3 தகுதி சுற்றுகள்.
ஆண்கள் குவாட்ருபெல் ஸ்கல்ஸ் ஹீட் 2 தகுதி சுற்றுகள்.
பெண்கள் குவாட்ருபெல் ஸ்கல்ஸ் ஹீட் 2 தகுதி சுற்றுகள்.
இந்த முதல் தகுதி சுற்று போட்டியிலேயே ஆண்கள் டபுள் ஸ்கல்ஸ் எனப்படும் இரட்டையர் பிரிவில் பிரான்சின் ஹியூகோ பவுச்ரான், மத்தேயு அன்ட்ரோலிஸ் ஆகியோர் 6:10.45 நிமிடத்தில் தங்கள் சுற்றை முடித்து சாதனை படைத்தனர். இதற்கு முன் இதேபோன்ற ஆண்கள் டபுள் ஸ்கல்ஸ் பிரிவில் இதற்கு 2012 ஒலிம்பிக்கில் நியூசிலாந்து நிகழ்த்திய சாதனையான 6:11.30 என்ற நேரத்தை இவர்கள் முறியடித்துள்ளனர்.
ஆனால் இதே நாளில் இதே சாதனையை மீண்டும் நெதர்லாந்து குழு முறியடித்து. பிரான்ஸ் வீரர்களின் 6:10.45 நேரத்தை முந்தி 6:08.38 நிமிடத்தில் நெதர்லாந்தின் மெல்வின் டிவெல்லார், ஸ்டெப் போர்னிக் ஆகியோர் மூன்றாம் தகுதி சுற்று போட்டியில் வென்றனர். ஒரே நாளில் துடுப்பு படகு போட்டியின் இரட்டையர் தகுதி சுற்றில் அடுத்தடுத்து சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளது.
இன்று நடந்த தகுதி சுற்று போட்டிகளில் ஒவ்வொரு பிரிவிலும் 6 வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதனால் மொத்தமாக 72 பேர் இன்று துடுப்பு படகு போட்டியில் பங்கேற்றனர். இதில் ஆண்கள், பெண்கள் பிரிவில் மொத்தமாக 36 பேர் வெற்றிபெற்று அடுத்த சுற்றான காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்று உள்ளனர்.