16 மில்லியன் பாலோயர்கள்... உற்சாகத்தில் இந்திய அணி... ரசிகர்களுக்கு நன்றி!

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தொடர்ந்த பதிவுகளின்மூலம் ரசிகர்களுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளது.

 16 மில்லியன் பாலோயர்கள்... உற்சாகத்தில் இந்திய அணி... ரசிகர்களுக்கு நன்றி!

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தொடர்ந்த பதிவுகளின்மூலம் ரசிகர்களுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளது.

இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 16 மில்லியன் பாலோயர்களை இந்திய அணி பெற்றுள்ளது.

இதுகுறித்து மகிழ்ச்சியும் ரசிகர்களுக்கு நன்றியும் தெரிவித்துள்ள இந்திய அணி, வலிமையான இன்ஸ்டா குடும்பம் என்று கேப்ஷன் வெளியிட்டுள்ளது.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்திய அணி தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தொடர்ந்த அணி வீரர்கள் மற்றும் அணியின் விவரங்கள், வெற்றிகள், உற்சாக பதிவுகள், வருத்தங்கள் உள்ளிட்ட பல்வேறு தருணங்களை தொடர்ந்து பதிவிட்டு ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றுள்ளது.

இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் 16 மில்லியன் பின் தொடர்பவர்களை பெற்றுள்ளதாக இந்திய அணி மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும்விதமாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளது. விராட் கோலி, ஹர்மன்பிரீத் கவுர் மற்றும் பும்ரா உள்ளிட்டவர்கள் இடம்பெற்றுள்ள புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளது.

கடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டு தொடர்களை வெற்றி கொண்டுள்ளது இந்திய அணி. மேலும் டெஸ்ட் தொடரில் ரஹானே தலைமையிலான இந்திய அணி 2க்கு 1 என்ற கணக்கில் வெற்றி கொண்டு இமாலய சாதனை படைத்துள்ளது. இவற்றின் ஒவ்வொரு பதிவையும் இந்திய அணி தனது இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து பதிவிட்டது.