ஹெல்மெட்டை குறி வைத்து தாக்குங்கள்.. போட்டிக்கு இடையே ஐடியா கொடுத்த ஷேன் வார்னே.. 

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடர் செல்ல செல்ல ஆஸ்திரேலிய வீரர்களின் வார்த்தை ரீதியான தாக்குதல்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

ஹெல்மெட்டை குறி வைத்து தாக்குங்கள்.. போட்டிக்கு இடையே ஐடியா கொடுத்த ஷேன் வார்னே.. 

இந்திய வீரர் புஜாராவின் ஹெல்மெட்டை குறி வைத்து தாக்க வேண்டும், அவரின் ஹெல்மெட்டை உடைக்க வேண்டும் என்று ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் ஷேன் வார்னே கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடர் செல்ல செல்ல ஆஸ்திரேலிய வீரர்களின் வார்த்தை ரீதியான தாக்குதல்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளது. முதலில் இந்திய வீரர்களை களத்திற்கு வெளியே சர்ச்சையில் சிக்க வைத்து ஆஸ்திரேலியா பிரஷர் கொடுத்தது.

அதன்பின் களத்தில் இனவெறி தாக்குதல்கள் நடத்தப்பட்டது. இது போதாதென்று ஆஸ்திரேலிய வீரர்கள் கடுமையான ஸ்லெட்ஜிங்கில் இன்று ஈடுபட்டனர். இதுபோக வீரர்களை குறி வைத்து பவுலர்கள் தாக்குதல் நடத்தினார்கள்.

மூன்றாவது டெஸ்டில் ஆஸ்திரேலிய பவுலர்கள் குறி வைத்து தாக்கியதில்தான் விஹாரி, அஸ்வின், ஜடேஜா போன்ற முக்கியமான வீரர்கள் காயம் அடைந்தனர். 

இந்திய வீரர்களை களத்தில் வீழ்த்த முடியவில்லை என்பதால் வேண்டுமென்றே உடலில் தாக்குதல் நடத்தும் விதத்தில் பவுலிங் செய்தனர். தற்போது நான்காவது டெஸ்ட் போட்டியிலும் இதே தாக்குதல் தொடர்கிறது.

இப்படிப்பட்ட நிலையில்தான் ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் ஷேன் வார்னே கமெண்டரியில் கூறிய கருத்து ஒன்று பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்திய வீரர் புஜாரா களத்தில் செட்டாகிவிட்டார். அவர் பார்மிற்கு திரும்பிவிட்டார். இதை விட கூடாது.

அவருக்கு கடினமான பந்துகளை வீச வேண்டும். அவரை திணறடிக்க வேண்டும். அவரின் ஹெல்மெட்டை குறி வைத்து தாக்க வேண்டும், அவரின் ஹெல்மெட்டை உடைக்க வேண்டும். அப்போதுதான் அவரை தள்ளாட வைக்க முடியும்.

புஜாராவிற்கு கூடுதலாக பவுன்சர்களை வீச வேண்டும். ஆஸ்திரேலிய பவுலர்கள் விட கூடாது என்று ஷேன் வார்னே காமெண்டரியில் கூறியதுதான் தற்போது சர்ச்சையாகி உள்ளது. 

இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றும் நிலையில் இருப்பதால், தோல்வியை சகித்துக் கொள்ள முடியாமல் வேண்டும் என்றே இந்திய வீரர்களை இகழ்ந்து பேசும் வகையில் வார்னே காமெண்டரி செய்து வருகிறார். 

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0