களத்தில் ரோஹித்திடம் கோபப்பட்ட கோலி.. தலையை தொங்க போட்ட ஹிட்மேன்.. பாவம்

புஜாரா இரண்டு முறை கேட்ச் விட்டார். தொடக்கத்திலேயே பண்ட் முக்கியமான கேட்சை விட்டார். இதனால் களத்தில் கோலி கொஞ்சம் டென்ஷனாகவே காணப்பட்டார். ஆனால் இவர் வீரர்கள் யாரையும் இதற்காக திட்டவில்லை.

களத்தில் ரோஹித்திடம் கோபப்பட்ட கோலி.. தலையை தொங்க போட்ட ஹிட்மேன்.. பாவம்

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் விராட் கோலி சக வீரர் ரோஹித் சர்மாவிடம் கோபம் அடைந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியா இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி மிகவும் வலுவான நிலையில் உள்ளது.

555 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டை இழந்து இங்கிலாந்து அணி ஆடி வருகிறது. இரண்டு நாள் ஆட்டம் முடிந்த பின்பும் கூட இங்கிலாந்து அணி இன்னும் டிக்ளேர் செய்யவில்லை.

இங்கிலாந்து அணி இன்றும் விக்கெட்டை இழக்கவில்லை என்றால் கண்டிப்பாக பாதியில் ஆட்டத்தை டிக்ளேர் செய்ய வாய்ப்புள்ளது. இங்கிலாந்து அணி இவ்வளவு பெரிய ஸ்கோரை எடுக்க இந்திய வீரர்கள் கேட்ச் விட்டதும் முக்கிய காரணம் ஆகும். இந்திய வீரர்களின் பீல்டிங் இரண்டு நாட்களாக சரியாக இல்லை.

புஜாரா இரண்டு முறை கேட்ச் விட்டார். தொடக்கத்திலேயே பண்ட் முக்கியமான கேட்சை விட்டார். இதனால் களத்தில் கோலி கொஞ்சம் டென்ஷனாகவே காணப்பட்டார். ஆனால் இவர் வீரர்கள் யாரையும் இதற்காக திட்டவில்லை.

இந்த நிலையில் 175வது ஓவரை வாஷிங்க்டன் சுந்தர் வீசினார். அப்போது இங்கிலாந்து வீரர் டாம் பெஸ் இதேபோல் கேட்ச் கொடுத்தார். மிட் விக்கெட் திசையில் இருந்த ரோஹித் சர்மாவை நோக்கி அழகாக கேட்ச் கொடுத்தார். ஆனால் ரோஹித் சர்மா இதை தவறவிட்டார்.

கை விரலில் பட்டு பந்து டிராப் ஆனது. இந்த கேட்ச் விடப்பட்டதும் கோலி கோபத்தின் உச்சத்திற்கே சென்றார். ரோஹித் சர்மாவை கோபமாக முறைத்து பார்த்தார். கெட்ட வார்த்தையை உச்சரித்துக் கொண்டே நகர்ந்து சென்றார். ஆனால் ரோஹித் சர்மா இதற்கு எதிர்வினையாற்றவில்லை.

ரோஹித் சர்மா தலையை தொங்க போட்டபடி அப்படியே நடந்து சென்றார். நேற்று மற்ற வீரர்கள் கேட்ச் விடும் போது அவர்கள் யாரிடமும் கோபம் அடையாத ரோஹித் சர்மாவிடம் மட்டும் கோபம் அடைந்தார். கோலியின் இந்த பாரபட்சம் பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0