டிராவிட்டிற்கு இவ்வளவு கோபமா... கார் கண்ணாடிகள் அடித்து உடைப்பு... ஐபிஎல்க்கு நடுவே ஷாக்கான கோலி!

ஐபிஎல் தொடரில் பிசியாக இருக்கும் விராட் கோலியே இந்த விளம்பர படத்தை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

டிராவிட்டிற்கு இவ்வளவு கோபமா... கார் கண்ணாடிகள் அடித்து உடைப்பு... ஐபிஎல்க்கு நடுவே ஷாக்கான கோலி!

இந்திய அணியின் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் நடிப்பில் உருவாகியுள்ள தொலைக்காட்சி விளம்பரம் வெளியாகியுள்ளது. அதில் இதுவரை யாரும் காணாத டிராவிட் தோன்றியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் பிசியாக இருக்கும் விராட் கோலியே இந்த விளம்பர படத்தை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் கடந்த 2012ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். 

அவர் 164 டெஸ்ட் போட்டிகள், 344 ஒருநாள் மற்றும் ஒரே ஒரு டி20 போட்டியில் விளையாடியுள்ளார். தற்போது 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்து வருகிறார்.

இவர் தற்போது கிரெடிட் கார்ட் கட்டணங்களை செலுத்தும் க்ரெட் என்ற இணையதள விளம்பரத்தில் நடித்துள்ளார். இந்திய ரசிகர்களால் மிகவும் பொறுமையானவர் என அறியப்பட்ட டிராவிட், இந்த விளம்பர படத்தில் மிகவும் கோபக்காரர் போல நடித்துள்ளார். 

மேலும் காரில் இருந்து சாலையில் செல்வோர்களை திட்டுவது, பேட்டை வைத்து கார் கண்ணாடிகளை உடைப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார்.

இந்த விளம்பரத்தை பார்த்த இந்திய அணி கேப்டன் விராட் கோலி, ஐபிஎல் தொடரில் பிசியாக இருந்த போதும் தனது கருத்தை பதிவிட தவறவில்லை. 

அந்த ட்விட்டர் பதிவில், இதுவரை இது போன்ற ராகுல் டிராவிட்டை இதற்கு முன்னர் நான் பார்த்ததே இல்லை எனத் தெரிவித்துள்ளார். இதே ரியாக்‌ஷன் தான் ரசிகர்கள் பலரும் கொடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு வரும் நெட்டிசன்கள், ராகுல் டிராவிட்டை விளம்பர நிறுவனம் என்ன செய்து வைத்துள்ளது. டிராவிட்டிற்கு என்ன ஆனது. மிகவும் பொறுமையாக, நிதானமாக இருக்கக்கூடியவரை இப்படி செய்து வைத்தது யார்? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

like
0
dislike
0
love
0
funny
1
angry
0
sad
0
wow
0