பயிற்சியின் போது அதிர்ச்சி அளித்த நம்பிக்கை நட்சத்திரம்..டீமில் எடுத்ததே வேஸ்ட்டா?

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்காக பவுலிங் பயிற்சி செய்து கொண்டு இருந்த பாண்டியா மிக மோசமாக சொதப்பியதாக கூறப்படுகிறது. 

பயிற்சியின் போது அதிர்ச்சி அளித்த நம்பிக்கை நட்சத்திரம்..டீமில் எடுத்ததே வேஸ்ட்டா?

இந்தியா இங்கிலாந்து இடையிலான மூன்றாவது டெஸ்ட் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த போட்டியில் வென்றால் இந்திய அணிக்கு உலகக் கோப்பை டெஸ்ட் தொடரில் இறுதிப்போட்டிக்கு தேர்வாகும் வாய்ப்பு பிரகாசமாகும்.

இந்த டெஸ்ட் நாளை நடக்க உள்ளது. இதற்காக இந்திய அணி தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறது. இதில் ஆல்ரவுண்டர் பாண்டியா தீவிரமாக பவுலிங் பயிற்சி செய்து வருகிறார்.

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்காக பவுலிங் பயிற்சி செய்து கொண்டு இருந்த பாண்டியா மிக மோசமாக சொதப்பியதாக கூறப்படுகிறது. 

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இவரை களமிறக்க முடிவு செய்து இருந்தனர். 5வது பவுலராக இறக்க முடிவு செய்தனர்.

இதனால் இவரை பவுலிங் செய்ய சொல்லி சோதனை செய்யப்பட்டது . இவர் கடந்த இரண்டு வருடமாக பவுலிங் செய்யவில்லை. இதனால் இவரின் பவுலிங் எப்படி இருக்கிறது என்பதை சோதனை செய்வதற்காக கடந்த சில நாட்களாக டெஸ்டிங் நடந்தது.

இந்த சோதனையில் பாண்டியா சரியாக பவுலிங் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. பாண்டியா பவுலிங்கில் மோசமாக சொதப்பி இருக்கிறார். அதோடு துல்லியமாக பந்தை லைனில் பிட்ச் செய்ய முடியாமல் கஷ்டப்பட்டு இருக்கிறார்.

இதனால் இவருக்கு அணியில் வாய்ப்பு கிடைக்காது என்கிறார்கள். ஆல் ரவுண்டர் ஆப்ஷனுக்காக மட்டுமே பாண்டியாவை இந்திய அணியில் எடுத்தனர். இதனால் டெஸ்ட் போட்டிகளில் இனி வரும் நாட்களில் இவருக்கு வாய்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள்.