நீங்க எப்படி தமிழ்ல பேசலாம்.. ராபின் உத்தப்பாவின் வைரல் வீடியோ.. 

இந்த நிலையில் 2021 ஐபிஎல் தொடரை முன்னிட்டு சிஎஸ்கே அணியில் மூத்த வீரர் ராபின் உத்தப்பா எடுக்கப்பட்டு இருக்கிறார்.

நீங்க எப்படி தமிழ்ல பேசலாம்.. ராபின் உத்தப்பாவின் வைரல் வீடியோ.. 

சிஎஸ்கே அணியின் புதிய வீரர் ராபின் உத்தப்பா வீடியோ ஒன்றில் தமிழில் பேசியது பெரிய அளவில் வைரலாகி வருகிறது.

எப்போதும் ஐபிஎல் போட்டிகளில் நன்றாக ஆடும் சிஎஸ்கே அணி கடந்த சீசனில் மோசமாக சொதப்பி பிளே ஆப் செல்லும் வாய்ப்பை இழந்தது.  இதனால் இந்த முறை 6 வீரர்களை ரிலீஸ் செய்துவிட்டு, புதிய 6 வீரர்களை சிஎஸ்கே அணி ஏலம் எடுத்து இருக்கிறது.

இதனால் 2021 ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணி மீண்டும் அதிரடி காட்டும் என்று நம்பப்படுகிறது.

இந்த நிலையில் 2021 ஐபிஎல் தொடரை முன்னிட்டு சிஎஸ்கே அணியில் மூத்த வீரர் ராபின் உத்தப்பா எடுக்கப்பட்டு இருக்கிறார்.

டிரேடிங் முறையில் ராஜஸ்தான் அணியிடம் இருந்து இவர் வாங்கப்பட்டு இருக்கிறார். விஜய் ஹசாரே கோப்பை போட்டியில் கேரளா அணிக்காக இவர் அதிரடியாக ஆடி வருகிறார்.

கேரளா அணி விளையாடிய முதல் போட்டியிலேயே இவர் அதிரடியாக சதம் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சிஎஸ்கே அணியில் இணைந்தது குறித்து ராபின் உத்தப்பா தமிழில் பேசி வீடியோ வெளியிட்டு இருந்தார். 

தோனியுடன் மீண்டும் ஆடுவது சந்தோசம் அளிக்கிறது என்று உத்தப்பா குறிப்பிட்டு இருந்தார்.

அதிலும் சென்னை அணிக்காக ஆடுவது சந்தோசம் தருகிறது என்று ராபின் உத்தப்பா குறிப்பிட்டு இருந்தார். எனக்கு விசில் போட தெரியாது. ஆனால் விசில் போடும்படி கண்டிப்பாக ஆடுவேன் என்று குறிப்பிட்டு இருந்தார். 

இவர் குடகு பகுதியில் பிறந்து வளர்ந்தவர். இவருக்கு தமிழ், மலையாளம், கன்னடம், கொங்கணி, துளு உள்ளிட்ட மொழிகள் தெரியும்.

இதன் காரணமாக அவர் தமிழில் பேசினார். இந்த நிலையில் ராபின் உத்தப்பா தமிழில் பேசியது தவறு என்று சில விஷமிகள் டிவிட் செய்து வருகிறார்கள். 

ஒன்று அவர் இந்தி, கன்னடத்தில் பேச வேண்டும். அதைவிட்டுவிட்டு தமிழில் பேசுவது தவறு என்று நெட்டின்சன்கள் சிலர் கடுமையாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.

நீங்கள் இனி கர்நாடகா பக்கம் வரவே கூடாது என்றும் சிலர் மோசமாக கமெண்ட் செய்து வருகிறார்கள். அதே சமயம் உங்கள் தமிழ் நன்றாக இருக்கிறது. நீங்கள் அழகாக பேசுகிறீர்கள் என்றும் சிலர் குறிப்பிட்டு வருகிறார்கள் .

like
1
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0