முருகன் கோயிலில் மொட்டை போட்ட நடராஜன்! ஏன் தெரியுமா?

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3 தொடர்களிலும் தனது அறிமுக போட்டியில் பங்கேற்று விளையாடினார் தமிழக வீரர் நடராஜன். 

முருகன் கோயிலில் மொட்டை போட்ட நடராஜன்! ஏன் தெரியுமா?

இந்தியா -ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடரின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார் தமிழக வீரர் நடராஜன்.

தற்போதைய இங்கிலாந்து தொடரிலிருந்து இவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இவர் ஆஸ்திரேலிய தொடர் வெற்றிக்கு நன்றி கூறும் வகையில் பழனி முருகன் கோயிலுக்கு சென்று மொட்டை போட்டுள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3 தொடர்களிலும் தனது அறிமுக போட்டியில் பங்கேற்று விளையாடினார் தமிழக வீரர் நடராஜன். 

இந்த மூன்று தொடர்களிலும் தன்னுடைய சிறப்பான இருப்பை பதிவு செய்துள்ளார். இதன்மூலம் நெட் பௌலராக ஆஸ்திரேலியா சென்ற இவர் சிறப்பான ஆட்டங்களை தந்துள்ளார்.

தற்போது இங்கிலாந்து தொடரில் இவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இவர் நேற்றைய தினம் பழனி முருகன் கோயிலுக்கு சென்று மொட்டை போட்டுள்ளார். 

இதையடுத்து தான் மொட்டையுடன் கோயில் முன்பு இருக்கும் புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0