அந்த பேச்சுக்கே இடமில்லை.. அணியிடம் சொன்ன கோலி.. டிரெஸ்ஸிங் ரூமில் என்ன நடந்தது?

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கோலி பேட்டிங் இறங்க போகும் இடம் குறித்து நிறைய விவாதங்கள் நடந்து வருகிறது.

அந்த பேச்சுக்கே இடமில்லை.. அணியிடம் சொன்ன கோலி.. டிரெஸ்ஸிங் ரூமில் என்ன நடந்தது?

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கோலி பேட்டிங் இறங்க போகும் இடம் குறித்து நிறைய விவாதங்கள் நடந்து வருகிறது.

இந்தியா இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடர் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இரண்டு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் நாளை சென்னையில் தொடங்குகிறது.

இந்த தொடரில் வெற்றிபெற்றால் இந்திய அணி டெஸ்ட் உலகக் கோப்பை பைனல்ஸ் போட்டிகளில் ஆடும் வாய்ப்பை பெறும். இதனால் இந்திய அணி இந்த தொடருக்காக தீவிரமாக தயாராகி வருகிறது.

இந்த நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் கோலி மீண்டும் இணைந்து இருக்கிறார். இதனால் அணியின் பேட்டிங் ஆர்டரில் மீண்டும் மாற்றம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 

இந்திய அணியில் கோலி இல்லாத போது புஜாரா அல்லது ரஹானேதான் ஒன் டவுன் இறங்குவார்கள்.

சமயங்களில் கோலி இருக்கும் போதும் கூட புஜாரா ஒன் டவுன் இறங்கி ஆடி உள்ளார். இந்த நிலையில் கோலி மீண்டும் அணிக்குள் வந்துள்ளார். 
இதனால் இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் எப்படி இருக்கும் என்று கேள்வி எழுந்துள்ளது. அணிக்குள் வீரர்கள் எந்த வரிசையில் களமிறங்குவார்கள் என்று கேள்வி எழுந்துள்ளது.

அதன்படி கோலிக்கு பேட்டிங் இடத்தை மாற்றும் விருப்பம் இல்லை என்கிறார்கள். இவர் கண்டிப்பாக ஒன் டவுன் இறங்கும் திட்டத்தில்தான் இருக்கிறார் என்று கூறப்படுகிறது. 

இது தொடர்பாக கோலியிடம் டிரெஸ்ஸிங் ரூமில் விவாதிக்கப்பட்டு இருக்கிறது. பேட்டிங் ஆர்டரை மாற்றும் விருப்பம் உள்ளதா என்று கேட்கப்பட்டுள்ளது.

எக்காரணம் கொண்டும் பேட்டிங் ஆர்டரை மாற்றும் விருப்பம் இல்லை என்று கோலி குறிப்பிட்டு இருக்கிறார். பல நாட்களுக்கு பின் மீண்டும் இந்திய மண்ணில் சர்வதேச போட்டி நடக்கிறது. பார்மிற்கு திரும்ப இதுதான் சரியான நேரம். அதனால் கண்டிப்பாக ஒன் டவுன் இறங்குவேன்.

ஒன் டவுன் இறங்கினால் இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரும் வலிமையாக இருக்கும். அணியில் இருக்கும் மிடில் ஆர்டர் இதனால் வலிமை அடையும் என்று கோலி கூறியுள்ளார். 

இதனால் இந்திய அணியில் சுப்மான் கில், ரோஹித் சர்மா, கோலி, புஜாரா, ரஹானே என்று பேட்டிங் ஆர்டர் அமைந்து இருக்கும் என்று கூறுகிறார்கள்.

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0