இன்னாங்க இது... சிஎஸ்கேவில் இணைந்த 2 இலங்கை பௌலர்கள்!

நேற்று முதல் பயிற்சி போட்டிகளை சென்னையில் துவக்கியுள்ள அந்த அணியில் 2 இலங்கை பௌலர்கள் அணியின் ரிசர்வ் பௌலர்களாக தற்போது பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இன்னாங்க இது... சிஎஸ்கேவில் இணைந்த 2 இலங்கை பௌலர்கள்!

கடந்த சீசனில் ப்ளே-ஆப் சுற்றிற்கு முன்னேற முடியாமல் திணறி லீக் போட்டிகளிலேயே ஆட்டத்திலிருந்து வெளியேறியது எம்எஸ் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி.

இந்நிலையில் இந்த சீசனில் கோப்பையை வெல்லும் தீவிரம் அந்த அணியிடம் காணப்படுகிறது. மற்ற அணிகளுக்கு முன்னதாகவே தொடரின் துவக்கம் குறித்த அறிவிப்புக்கு முன்பே தங்களது பயிற்சி ஆட்டங்கள் குறித்து சிஎஸ்கே அறிவித்தது.

இந்நிலையில் நேற்று முதல் பயிற்சி போட்டிகளை சென்னையில் துவக்கியுள்ள அந்த அணியில் 2 இலங்கை பௌலர்கள் அணியின் ரிசர்வ் பௌலர்களாக தற்போது பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

ஐபிஎல் 2021 தொடர் அடுத்த மாதம் 9ம் தேதி துவங்கி மே மாதம் 30ம் தேதிவரை நடைபெறவுள்ளது. இதையொட்டி தற்போது அனைத்து அணிகளும் தங்களது பயிற்சிகளை துவக்கியுள்ளன. ஆனால் இந்த தேதி அறிவிப்புக்கு முன்னதாகவே சிஎஸ்கே தனது பயிற்சி முகாம் குறித்த அறிவிப்பை வெளியிட்டது.

கடந்த சீசனில் இதுவரை இல்லாத அளவில் ப்ளே-ஆப் சுற்றிற்குகூட முன்னேறாமல் வெளியேறியது சிஎஸ்கே. ஆயினும் அடுத்தடுத்த போட்டிகளில் சமாளித்து வெற்றி பெற்று 7வது இடத்தில் நிலைபெற்று வெளியேறியது. 3 முறை சாம்பியனான அந்த அணிக்கு கடந்த சீசன் ஆரம்பம் முதலே மிகுந்த சவால் நிறைந்ததாக இருந்தது.

கடந்த சீசனில் ரெய்னா, ஹர்பஜன் சிங் வெளியேற்றம், அணி வீரர்கள் உள்பட 13 பேருக்கு கொரோனா தொற்று உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் சிக்கி தடுமாறியது சிஎஸ்கே. இந்நிலையில் தற்போது அந்த அணி இந்த சீசனில் சிறப்பான திட்டங்களுடன் களமிறங்கியுள்ளது.

அணியில் குறைபாடுகளை நிவர்த்தி செய்யும்விதமாக ஏலத்தின்போது அணி வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்றைய தினம் தங்களது பயிற்சி முகாமை துவக்கியுள்ள அந்த அணியில் 2 இளம் இலங்கை அணியை சேர்ந்த பௌலர்கள் இணைந்து பயிற்சி மேற்கொண்டுள்ளனர்.

மகீஷ் தீக்ஷனா மற்றும் மதீஷா பதிரானா என்ற இரு இலங்கை பௌலர்கள் ரிசர்வ் பௌலர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் இவர்கள் இருவரும் முக்கிய அணியுடன் இணைந்து நேற்று முதல் பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். 

வரும் ஏப்ரல் 9ம் தேதி முதல் ஐபிஎல் தொடர் துவங்கவுள்ள நிலையில் 10ம் தேதி சிஎஸ்கே, டெல்லி கேபிடல்ஸ் அணியுடன் மோதவுள்ளது.

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0