ஜெயிச்சே ஆகணும்... அணி வீரர்களை ஓடவிடும் டேவிட் வார்னர்... 

நாளை முதல் 13ம் தேதிவரை சன்ரைசர்ஸ் அணி தொடர்ந்து அடுத்தடுத்த 3 போட்டிகளில் விளையாடவுள்ளது. 

ஜெயிச்சே ஆகணும்... அணி வீரர்களை ஓடவிடும் டேவிட் வார்னர்... 

மும்பை இந்தியன்ஸ் அணியிடம் பெற்ற தோல்வியை அடுத்து, அடுத்ததாக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடன் நாளை சன்ரைசர்ஸ் ஐதராபாத் மோதவுள்ளது. 

அணிக்கு மேலும் ஒரு பின்னடைவாக அணியின் முக்கிய பௌலர் புவனேஸ்வர் குமார் காயம் காரணமாக தொடரிலிருந்து வெளியேறியுள்ளார். 

இந்நிலையில், அணியின் கேப்டன் டேவிட் வார்னர், தன்னுடைய அணி வீரர்களை உற்சாகப்படுத்தும்வகையிலும் மேலும் பயிற்சிகள் அளிக்கும்வகையிலும் அவர்களுடன் இணைந்து பீச் வாலிபால் பயிற்சி மேற்கொண்டார். 

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கடந்த ஞாயிற்றுக்கிழமை ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதிய போட்டியில் 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 

இதையடுத்து நாளை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடன் அந்த அணி மோதவுள்ளது. தொடரிலிருந்து விலகிய புவனேஸ்வர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடனான நாளைய போட்டியில் ஜெயித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் சன்ரைசர்ஸ் உள்ளது. 

அதன்மூலமே அடுத்த கட்டத்திற்கு அந்த அணியால் நகர முடியும். காயம் காரணமாக சன்ரைசர்சின் ஆல்-ரவுண்டர் மிட்செல் மார்ஷ் விலகிய நிலையில், தற்போது புவனேஸ்வர் குமாரும் தொடரிலிருந்தே விலகியுள்ளார். 

இது அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. நாளை முதல் 13ம் தேதிவரை சன்ரைசர்ஸ் அணி தொடர்ந்து அடுத்தடுத்த 3 போட்டிகளில் விளையாடவுள்ளது. 

இந்நிலையில், அணி வீரர்களை உற்சாகப்படுத்தும்வகையில் அணியின் கேப்டன் அவர்களுக்கு பல்வேறு தொடர் பயிற்சிகளை அளித்து வருகிறார். 

வீடியோ பதிவு இதன் தொடர்ச்சியாக அணி வீரர்களுடன் இணைந்து கேப்டன் டேவிட் வார்னர் பீச் வாலிபால் பயிற்சி செய்தார். சக வீரர்களும் உற்சாகமாக இந்த பயிற்சியில் ஈடுபட்டனர். 

இந்த பயிற்சியின் அழகான வீடியோவை சன்ரைசர்ஸ் ஐதராபாத் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
1