இவங்களுக்கா இந்த நிலைமை... ஸ்டார் ப்ளேயர்ஸை கண்டுக்காத அணிகள்

அதற்கு மாற்றாக கிறிஸ் மோரிஸ், மேக்ஸ்வெல், கிருஷ்ணப்பா கவுதம் போன்றோர் அதிக விலைக்கு ஏலம் போயுள்ளனர்.

இவங்களுக்கா இந்த நிலைமை... ஸ்டார் ப்ளேயர்ஸை கண்டுக்காத அணிகள்

ஐபிஎல் தொடரில் அதிரடி காட்டிய முக்கிய நட்சத்திரங்கள் இந்த ஆண்டு ஏலத்தில் கண்டுகொள்ளப்படாமல் போயுள்ளனர்.

ஐபிஎல் ஏலத்தில் பல்வேறு திருப்பங்களை அணிகள் கொண்டு வரும். ஆனால் இந்த முறையோ ஐபிஎல்-ல் அதிரடி காட்டி வந்த ஸ்டார் ப்ளேயர்ஸ் சிலரை எந்த அணியும் கண்டுக்கொள்ளாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதற்கு மாற்றாக கிறிஸ் மோரிஸ், மேக்ஸ்வெல், கிருஷ்ணப்பா கவுதம் போன்றோர் அதிக விலைக்கு ஏலம் போயுள்ளனர்.

ஆஸ்திரேலிய டி20 அணிக்கு அதிகப்படியான நல்ல அடித்தளத்தை அமைத்து கொடுத்தவர் ஆரோன் பின்ச். கடந்தாண்டு ஐபிஎல்-ல் பெங்களூரு அணிக்காக விளையாடிய பின்ச், 12 போட்டிகளில் 268 ரன்களை எடுத்தார். 
ஆனால் இந்தாண்டு ஏலத்தில் எந்த அணியாலும் கண்டுக்கொள்ளப்படவில்லை. இவர் இதுவரை 314 டி20 போட்டிகளில் ஆடி 9,251 ரன்களை குவித்தவர் ஆவார்.

இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் கடைசியாக நடைபெற்ற பிக் பேஷ் தொடரில் அதிரடி காட்டினார். அத்தொடரில் மொத்தம் 543 ரன்கள் அடித்து ரன் சராசரியை 38.79 வைத்திருந்தார். 

இதனால் ஐபிஎல் ஏலத்தில் எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் எந்த அணியும் அவரை ஏலம் எடுக்கவில்லை. இதே போல இங்கிலாந்து ஜேஸன் ராயும் ஏலம் எடுக்கப்படவில்லை.

அலெக்ஸ் ஹேல்ஸ், ராய் போல இங்கிலாந்து அணியின் மற்றொரு ஆட்டக்காரர் சாம் பில்லிங்ஸும் இந்த ஐபிஎல்-ல் கண்டுக்கொள்ளப்படவில்லை. 

ஐபிஎல் போட்டிகளில் இவர் அதிகளவில் விளையாடவில்லை என்றாலும் இவருக்கு ஆரம்ப தொகை ரூ.2 கோடியாக இருந்தது. இதுவும் அவர் ஏலம் போகாததுக்கு காரணம் என்ன கூறப்படுகிறது.

நியூசிலாந்து அணியின் அதிரடி ஆட்டக்காரர் மார்ட்டின் கப்தில். கடந்த ஆண்டு ஐதராபாத் அணியால் விடுவிக்கப்பட்ட இவர் தொடர்ந்து 2வது ஆண்டாக ஏலம் எடுக்கப்படவில்லை. 

இதற்கு காரணம் இவர், டி20 போட்டிக்கு சரியாக இருக்க மாட்டார் என அணிகள் எண்ணுவதாக தெரிகிறது. இதுவரை 13 ஐபிஎல் போட்டிகளில் ஆடியுள்ள கப்தில் 270 ரன்களே எடுத்துள்ளார்.

மும்பை அணியின் மிக முக்கிய பந்துவீச்சாளராக இருந்தவர் மெக்லனேகன். இதுவரை 56 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 71 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். ஆனால் அவரின் வயது காரணமாக இந்த முறை எந்த அணியும் கண்டுக்கொள்ளவில்லை.