20,000 பேர் உட்காரலாம்... இந்தியாவோட பெரிய ஹாக்கி மைதானம்!
வரும் 2023 எப்ஐஎச் ஆண்கள் ஹாக்கி உலக கோப்பை ஒடிசாவில் தொடர்ந்து இரண்டாவது முறையாக நடத்தப்பட உள்ள நிலையில், போட்டிகள் புவனேஸ்வர் மற்றும் ரூர்கேலாவில் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே மிகப்பெரிய ஹாக்கி மைதானம் ஒடிசாவின் ரூர்கேலா நகரில் நிர்மானிக்கப்பட உள்ளதாக ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.
உலகத்தரத்தில் 15 ஏக்கர்களில் அமைக்கப்பட உள்ள இந்த மைதானத்தில் ஒரே நேரத்தில் 20,000 பேர் பார்வையாளர்களாக அமர்ந்து போட்டிகளை ரசிக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ரூர்கேலாவின் பிஜூ பட்நாயக் தொழில்நுட்ப பல்கலைகழக வளாகத்தில் இந்த மைதானம் நிர்மானிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 2023 எப்ஐஎச் ஆண்கள் ஹாக்கி உலக கோப்பை ஒடிசாவில் தொடர்ந்து இரண்டாவது முறையாக நடத்தப்பட உள்ள நிலையில், போட்டிகள் புவனேஸ்வர் மற்றும் ரூர்கேலாவில் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் வரும் 2023ல் ஆண்கள் ஹாக்கி உலக கோப்பையை நடத்துவதில் பெருமிதம் கொள்வதாக வீடியோ மூலம் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் பட்நாயக் தெரிவித்துள்ளார். இந்திய ஹாக்கி விளையாட்டில் சுந்தர்கர் பங்களிப்பை போற்றும்வகையில் இந்த சர்வதேச மைதானம் அமைக்கப்பட உள்ளதாகவும் பட்நாயக் குறிப்பிட்டார்.
ரூர்கேலாவில் உலக கோப்பை தொடரை வடிவமைக்கும் சூழல் குறித்து சமீபத்தில் அதிகாரிகள், சர்வதேச ஹாக்கி பெடரேஷன், விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை மற்றும் ஹாக்கி இந்தியாவை சேர்ந்த உறுப்பினர்களை கொண்ட குழு ஆய்வு மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.