மும்பை அணியில் சச்சின் மகன்.. கடைசி நேர ட்விஸ்ட்.. அடுத்து ஐபிஎல்? 

வேகப் பந்துவீச்சாளரான அவர் தற்போது மும்பை அணியில் எப்படி இடம் பிடித்தார்? அடுத்து ஐபிஎல் தொடரில் இடம் பெற தற்போது அவருக்கு மும்பை மாநில அணியில் இடம் அளிக்கப்பட்டுள்ளதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

மும்பை அணியில் சச்சின் மகன்.. கடைசி நேர ட்விஸ்ட்.. அடுத்து ஐபிஎல்? 

உள்ளூர் டி20 தொடரான சையது முஷ்டாக் அலி டி20 தொடருக்கு அனைத்து மாநில அணிகளும் அணித் தேர்வு செய்து முடித்துள்ளன.

அதில் மும்பை அணியில் சச்சின் மகனான அர்ஜுன் டெண்டுல்கர் இடம் பிடித்துள்ளார்.

வேகப் பந்துவீச்சாளரான அவர் தற்போது மும்பை அணியில் எப்படி இடம் பிடித்தார்? அடுத்து ஐபிஎல் தொடரில் இடம் பெற தற்போது அவருக்கு மும்பை மாநில அணியில் இடம் அளிக்கப்பட்டுள்ளதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

2021 ஐபிஎல் தொடர் மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் துவங்க உள்ளது. அதற்கு முன்னதாக உள்ளூர் வீரர்களின் திறமையை வெளிக்காட்டும் வகையில் சையது முஷ்டாக் அலி டி20 தொடர் நடத்தப்பட உள்ளது. இந்த தொடரின் செயல்பாடை வைத்து ஐபிஎல் ஏலத்தில் அணிகள் உள்ளூர் வீரர்களை வாங்க முடியும்.

கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கும் நிலையில் ஒவ்வொரு மாநில அணியும் 22 வீரர்கள் கொண்ட அணியை தேர்வு செய்ய பிசிசிஐ அறிவுறுத்தி இருந்தது. அதன் அடிப்படையில் மும்பை அணியில் முதலில் தேர்வு செய்யப்பட்ட 20 வீரர்களுடன் அர்ஜுன் டெண்டுல்கர் மற்றும் க்ருதிக் ஹனகாவதி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

2018இல் அண்டர் 19 அணியில் இடம் பெற்று இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டார் அர்ஜுன். அப்போது அவரது செயல்பாடு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. மும்பை மாநில சீனியர் அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. ஆனால், தற்போது அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

2021 ஐபிஎல் தொடரில் அவர் மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைய வாய்ப்பு உள்ளதாக கிசுகிசுக்கள் எழுந்து வருகின்றன. கடந்த ஐபிஎல் சீசனில் அவர் மும்பை இந்தியன்ஸ் அணியின் வலை பயிற்சி பந்துவீச்சாளராக அணியுடன் பயணம் செய்தது குறிப்பிடத்தக்கது.

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0