கோபமாக முறைத்து பார்த்த ரோஹித் சர்மா.. இளம் இந்திய வீரருடன் மோதல்.. பின்னணி!

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் லாம் வீரர் பிரித்வி ஷாவிடம் மூத்த வீரர் ரோஹித் சர்மா கோபம் அடைந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோபமாக முறைத்து பார்த்த ரோஹித் சர்மா.. இளம் இந்திய வீரருடன் மோதல்.. பின்னணி!

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் லாம் வீரர் பிரித்வி ஷாவிடம் மூத்த வீரர் ரோஹித் சர்மா கோபம் அடைந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. கடைசி போட்டியில் வெற்றிபெறும் அணி பார்டர் - கவாஸ்கர் கோப்பையை வெல்லும்.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்த நிலையில் இரண்டு அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்து வருகிறது.

இந்த நிலையில் தற்போது வரை 150 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டை இழந்து ஆடி வருகிறது. இந்திய பவுலிங் அவ்வளவு சிறப்பாக இல்லை என்றாலும் பெரிய அளவில் சொதப்பவில்லை. இதுவரை நடந்த ஆட்டத்தில் இரண்டு அணிகளும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் லாம் வீரர் பிரித்வி ஷாவிடம் மூத்த வீரர் ரோஹித் சர்மா கோபம் அடைந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மார்னஸ் அடித்த பந்து ஒன்று லெக் குள்ளி திசையில் இருந்த ப்ரித்வி ஷாவிடம் சென்றது.

அந்த பந்தை எடுத்த ப்ரித்வி ஷா அவசரப்பட்டு பந்தை வேகமாக பவுலர் எண்ட் பகுதியில் இருக்கும் ஸ்டம்பை நோக்கி வீசினார். ஆனால் இடையில் ரோஹித் சர்மா சில்லி மிட் ஆன் திசையில் நின்று கொண்டு இருந்ததை ப்ரித்வி ஷா கவனிக்கவில்லை. ப்ரித்வி ஷா வேகமாக வீசிய பந்து நேராக சென்று ரோஹித் சர்மா கையில் பட்டது.

வேகமாக சென்று பந்து ரோஹித் சர்மாவை தாக்கியது. இதில் ரோஹித் சர்மா கையில் லேசான காயம் ஏற்பட்டு துடித்து போனார்.இதனால் கோபம் அடைந்த ரோஹித் சர்மா பந்தை கீழே போட்டுவிட்டு கோபமாக ப்ரித்வி ஷாவை முறைத்து பார்த்தார்.

ரோஹித் சர்மா கோபமாக பார்த்த விதம் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த ஓவருக்கு பின் ப்ரித்வி ஷா நேராக சென்று ரோஹித் சர்மாவிடம் மன்னிப்பு கேட்டார். இன்று சைனி காயம் அடைந்த காரணத்தால் ப்ரித்வி ஷா பீல்டிங் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

like
0
dislike
0
love
1
funny
0
angry
0
sad
0
wow
0