ஒரு குட்டி ஸ்டோரி.. உலகம் முழுக்க வைரலான விஜய் பாட்டு.. அஸ்வினின் ஆக்ரோஷ சதம்..!

அஸ்வின் 106 ரன்கள் எடுத்துள்ளனர். இங்கிலாந்துக்கு இந்திய அணி 482 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

ஒரு குட்டி ஸ்டோரி.. உலகம் முழுக்க வைரலான விஜய் பாட்டு.. அஸ்வினின் ஆக்ரோஷ சதம்..!

இங்கிலாந்து அணிக்கு எதிராக தமிழக வீரர் அஸ்வின் மிகவும் சிறப்பாக ஆடி சதம் அடித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்டில் அஸ்வின் அதிரடியாக ஆடி உள்ளார்.இந்திய அணி 2வது இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 286 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆகியுள்ளது.

அஸ்வின் 106 ரன்கள் எடுத்துள்ளனர். இங்கிலாந்துக்கு இந்திய அணி 482 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

இங்கிலாந்து அணிக்கு எதிராக தமிழக வீரர் அஸ்வின் மிகவும் சிறப்பாக ஆடி சதம் அடித்துள்ளார். முக்கிய வீரர்கள் எல்லாம் அணியில் அஸ்வின் அதிரடியாக ஆடி சதம் அடித்துள்ளார் . 

இன்று காலையிலேயே வரிசையாக இந்திய அணியின் முக்கிய வீரர்கள் புஜாரா, ரோஹித், பண்ட் ஆகியோர் வரிசையாக அவுட் ஆனார்கள். அதன்பின் அஸ்வின் கோலி ஜோடி போட்டனர்.

இரண்டு பேரும் ஜோடி போட்டு அதிரடியாக ஆட தொடங்கினார்கள். தேவையான பந்துகளை தேர்வு செய்து அடித்தார். முக்கியமாக இவர் ஸ்பின் பவுலர்களை சிறப்பாக எதிர்கொண்டார். ஸ்பின் பவுலர்களை இவர் எதிர்கொண்ட விதம் மிகவும் சிறப்பாக இருந்தது.

அதிலும் இவர் ஸ்வீப் ஷாட் அடித்த விதம், மொயின் அலி பந்தில் இவர் சிக்ஸ் அடித்த விதம் எல்லாம் சிறப்பாக இருந்தது. பிட்ச் மோசமாக இருக்கிறது என்று இங்கிலாந்து வீரர்கள் வைத்த புகாரை எல்லாம் கண்டுகொள்ளாமல் அஸ்வின் மிகவும் அதிரடியாக ஆடி சதம் அடித்துள்ளார்.

இந்த சதம் மூலம் 5 விக்கெட் எடுத்து 100 ரன்கள் எடுத்த ஒரே இந்திய வீரர் என்ற சாதனையை அஸ்வின் படைத்துள்ளார். இதனால் இணையத்தில் தற்போது குட்டி ஸ்டோரி என்ற விஜய் பாடல் வைரலாகி வருகிறது. அஸ்வின் தனது யூ டியூப் பக்கத்தில் குட்டி ஸ்டோரி என்று ஒவ்வொரு கிரிக்கெட் தொடர் குறித்து பேசுவார்.

ஆஸ்திரேலிய தொடர் குறித்தும் அஸ்வின் குட்டி ஸ்டோரி வெளியிட்டார் . இதனால் தற்போது தமிழ் தெரியாத ஆட்கள் கூட குட்டி ஸ்டோரி என்ற வார்த்தையை வைரலாக்கி வருகின்றனர். சென்னையின் சூப்பர் கிங் என்று அஸ்வினை பலரும் பாராட்டி வருகிறார்கள்.