சொன்னால் தப்பாகிவிடும்.. சர்ச்சையை கிளப்பிய கவாஸ்கர்.. கோலிக்கு செக்

ரஹானே அப்படி ஆக்ரோஷமான வீரர் கிடையாது. ரஹானே தனது கோபத்தை எல்லாம் வெளியில் காட்டுவது இல்லை. அவர் தனது திட்டமிடலில் திறமையை வெளிப்படுத்துகிறார்.

சொன்னால் தப்பாகிவிடும்.. சர்ச்சையை கிளப்பிய கவாஸ்கர்.. கோலிக்கு செக்

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கும் ரஹானே மிகவும் சிறப்பாக கேப்டன்சி செய்து வருகிறார் என்று முன்னாள் வீரர் கவாஸ்கர் கூறியுள்ளார்.

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 195 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் ஆல் அவுட் ஆனது.

இந்த நிலையில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறது. இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 277 ரன்கள் எடுத்தது.

இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரஹானே மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இவரின் கேப்டன்சி பெரிய அளவில் பாராட்டுக்கு உள்ளாகி உள்ளது. 

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கும் ரஹானே மிகவும் சிறப்பாக கேப்டன்சி செய்து வருகிறார் என்று முன்னாள் வீரர் கவாஸ்கர் கூறியுள்ளார்.

கவாஸ்கர் தெரிவித்துள்ள கருத்தில், ரஹானே சிறப்பாக செயல்படுகிறார். அவர் நன்றாக திட்டம் வகுக்கிறார். பலரும் இவரின் கேப்டன்சியை கவனிக்க தொடங்கி உள்ளனர். ஒரு கேப்டனாக பொறுப்பை உணர்ந்து ஆடுகிறார்.

அதிலும் இவர் பவுலிங் ரொட்டேஷன் அனுப்பும் முறை, பீல்டர்களை நிற்க வைக்கும் முறை எல்லாம் மிகவும் சிறப்பாக உள்ளது. மிகவும் கூலாக இருக்கும். கோலி தனது கோபத்தை வெளியில் காட்டுவார்.

ஆனால் ரஹானே அப்படி ஆக்ரோஷமான வீரர் கிடையாது. ரஹானே தனது கோபத்தை எல்லாம் வெளியில் காட்டுவது இல்லை. அவர் தனது திட்டமிடலில் திறமையை வெளிப்படுத்துகிறார்.

அவர் சிறப்பாக ஆடினாலும் நான் அவரை பாராட்ட முடியாது. ஏனென்றால் நான் மும்பை வீரருக்கு ஆதரவாக இருக்கிறேன் என்று கூறி விடுவார்கள். நான் பேசினால் தப்பாக அதை மாற்றுவார்கள். 

நான் பாரபட்சமாக இருக்கிறேன் என்று கூறி விடுவார்கள். அதனால் நான் அப்படி இருக்க விரும்பவில்லை என்று கவாஸ்கர் குறிப்பிட்டுள்ளார்.

கவாஸ்கருக்கும் கோலிக்கும் கடந்த சில நாட்களாக மோதல் நிலவி வருகிறது. கோலி விடுப்பு எடுத்து இந்தியா திரும்பியதை கூட கவாஸ்கர் விமர்சனம் செய்து இருந்தார். இந்த நிலையில் தற்போது ரஹானேவை கவாஸ்கர் பாராட்டி உள்ளார்.