‘சுழல் ஆடுகளத்தில் நீண்டநேரம் விக்கெட் காப்பாளராக இருப்பது கடினம்’

இலங்கையிலும் ஆசிய ஆடுகளங்களும் சுழல்பந்துவீச்சுக்கு சாதகமானவை. இவ்வாறான மைதானங்களில் நீண்ட நேரம் விக்கெட் காப்பாளராக விளையாடுவது சிரமமானது என இங்கிலாந்தின் பென் போக்ஸ் தெரிவித்துள்ளார்.

‘சுழல் ஆடுகளத்தில் நீண்டநேரம் விக்கெட் காப்பாளராக இருப்பது கடினம்’

இங்கிலாந்து கிரிக்கெட் சபை சர்வதேச போட்டிகளுக்கான வீரர்களை சுழற்சி முறையில் தேர்வு செய்துவருகிறது. இதனால் இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ள ஜோஸ் பட்லர் அதன் பின்பு இங்கிலாந்துக்கு சென்றுவிட்டு தொடரின் இடையில் திரும்பவுள்ளார்.

அதற்கமைய இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து சார்பாக விக்கெட் கீப்பராக பென் போக்ஸ் களமிறங்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்ட விடயத்தை கூறியுள்ளார்.

இலங்கையிலும் ஆசிய ஆடுகளங்களும் சுழல்பந்துவீச்சுக்கு சாதகமானவை. இவ்வாறான மைதானங்களில் நீண்ட நேரம் விக்கெட் காப்பாளராக விளையாடுவது சிரமமானது என இங்கிலாந்தின் பென் போக்ஸ் தெரிவித்துள்ளார்.

இங்குள்ள மைதானங்களில் பந்து சுழன்றுவரும் தன்மை அதிகமாக இருக்கும். அதற்கேற்றாற் போல் அபாரமாக செயற்பட வேண்டியிருக்கும். மிகப்பெரிய துடுப்பாட்ட வரிசையைக் கொண்ட இந்திய அணியை சுழற்பந்து வீச்சைக் கொண்டே சமாளிக்க வேண்டும்.

என்றாலும் அது அவ்வளவு இலகுவானதல்ல. எனவே, தொடர்ந்து விக்கெட் காப்பாளராக செயற்படுவதென்பது கடினமானது. எனது திறமையை நிரூபித்து இங்கிலாந்தை வெற்றிக்கு அழைத்துச்செல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறேன் என பென் போக்ஸ் மேலும் குறிப்பிட்டுள்ளார்.