எங்களை விலங்கு போல நடத்தாதீர்கள்.. கொதித்தெழுந்த பிசிசிஐ.. அதிர வைத்த சம்பவம்!

அதுவும் கிரிக்கெட் தொடருக்கு இடைப்பட்ட நாட்களில் இப்படி வீரர்களாய் அடைத்து வைப்பது நியாயம் இல்லை. ஆஸ்திரேலிய வீரர்கள் எல்லாம் வேறு வேறு இடங்களுக்கு செல்கிறார்கள்.

எங்களை விலங்கு போல நடத்தாதீர்கள்.. கொதித்தெழுந்த பிசிசிஐ.. அதிர வைத்த சம்பவம்!

இந்திய வீரர்களிடம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் பாரபட்சமாக செயல்பட்டதாக பிசிசிஐ அதிகாரிகள் புகார் வைத்துள்ளனர். இந்திய வீரர்களை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வேண்டுமென்று தவறாக நடத்தியதாக கூறப்படுகிறது.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கும் இந்திய வீரர்கள் கடுமையாக அழுத்தத்திற்கு உள்ளாகி வருகிறார்கள். இரண்டாவது டெஸ்டில் இந்திய அணி வெற்றிபெற்ற பிறகு இந்த அழுத்தம் இன்னும் அதிகம் ஆகியுள்ளது.

இந்திய வீரர்கள் ஆஸ்திரேலிய விதிகளை மதிக்க வேண்டும், இல்லையென்றால் ஆஸ்திரேலியாவிற்கு அவர்கள் வர கூடாது என்று ஆஸி. எம்பி சொல்லும் அளவிற்கு இந்திய வீரர்களுக்கு வெளிப்படையாக அழுத்தம் கொடுக்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்திய வீரர்களிடம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் பாரபட்சமாக செயல்பட்டதாக பிசிசிஐ அதிகாரிகள் புகார் வைத்துள்ளனர். இந்திய வீரர்களை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வேண்டுமென்று தவறாக நடத்தியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பிசிசிஐ அதிகாரி ஒருவர் வெளியிட்டுள்ள தகவலில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் எங்களிடம் பாரபட்சமாக செயல்படுகிறது.

மைதானத்தில் போட்டியை பார்க்க 20 ஆயிரம் ரசிகர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். வீரர்கள் சிக்ஸ் அடிக்கும் போது அந்த பந்தை பிடித்து இவர்கள்தான் தூக்கி வீசுகிறார்கள். நடுவர்கள் யாரும் தனிமைப்படுத்தவில்லை. மைதானத்தில் எங்கும் பயோ பபுள் பின்பற்றப்படவில்லை.

அப்படி இருக்கும் போது வீரர்கள் மட்டும் கடுமையாக தனிமைப்படுத்தப்படுவது ஏன்? வீரர்களை தனிமைப்படுத்துவது கூட ஒருவகையில் ஓகே. ஆனால் இந்திய வீரர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. இந்திய வீரர்கள் தங்கள் தங்கி இருக்கும் ஹோட்டலில் ஒரு இடத்தில் இன்னொரு இடத்திற்கு செல்ல கூட அனுமதிக்கப்பட வில்லை.

இந்திய வீரர்கள் எல்லோரும் கொரோனா சோதனை செய்து நெகட்டிவ் என்று வந்துள்ளது. ஆனாலும் கூட கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. ஆஸ்திரேலிய வீரர்கள் நடத்தப்படுவது போல எங்களை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நடத்தவில்லை. குறைந்தபட்ச மரியாதையை கூட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் கொடுக்கவில்லை.

சரணாலயத்தில் இருக்கும் விலங்குகளை நடத்துவது போல எங்களை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அடைத்து வைத்து உள்ளது. அதுவும் கிரிக்கெட் தொடருக்கு இடைப்பட்ட நாட்களில் இப்படி வீரர்களாய் அடைத்து வைப்பது நியாயம் இல்லை. ஆஸ்திரேலிய வீரர்கள் எல்லாம் வேறு வேறு இடங்களுக்கு செல்கிறார்கள்.

ஆனால் இந்திய வீரர்கள் அதற்கு அனுமதிக்கப்படுவது இல்லை.அதிலும் ரோஹித் சர்மா உள்ளிட்ட 5 வீரர்களை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் மோசமாக நடத்துகிறது. அதிலும் இவர்கள் 5 பேருக்கும் கொரோனா நெகட்டிவ் என்று வந்துள்ள நிலையில் , அவர்களை தனியாக இருக்கும்படி ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியமும் வற்புறுத்துவது மிகவும் தவறு, என்று பிசிசிஐ அதிகாரி கூறியுள்ளார்.

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0