உங்களோட ஆட்டத்த பாக்கறதுக்கு எவ்ளோ சந்தோஷமா இருந்துச்சு... உற்சாகத்தில் துள்ளிய டாப்சி

இந்த போட்டியில் துவக்க வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா 64 பந்துகளில் 80 ரன்களை குவித்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வெற்றி பெற செய்துள்ளார்.

உங்களோட ஆட்டத்த பாக்கறதுக்கு எவ்ளோ சந்தோஷமா இருந்துச்சு... உற்சாகத்தில் துள்ளிய டாப்சி

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையிலான 5 போட்டிகளை கொண்ட ஒருநாள் மகளிர் தொடரின் இரண்டாவது ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்று தொடரை 1க்கு 1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.

இந்த போட்டியில் துவக்க வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா 64 பந்துகளில் 80 ரன்களை குவித்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வெற்றி பெற செய்துள்ளார்.

இந்நிலையில் இந்த போட்டியில் மந்தனாவின் ஆட்டம் பார்ப்பதற்கு மிகுந்த உற்சாகத்தை அளித்ததாக பாலிவுட் நடிகை டாப்சி பண்ணு தனது டிவிட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க மகளிர் ஒருநாள் தொடர் நடைபெற்றுவரும் நிலையில், முதலில் ஆடிய போட்டியில் இந்திய மகளிர் மோசமான தோல்வியை சந்தித்தனர். இந்நிலையில் இன்று ஆடப்பட்ட இரண்டாவது போட்டியில் அதற்கு பழிதீர்த்துக் கொண்டு 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளனர்.

இன்றைய வெற்றி மூலம் 5 போட்டிகளை கொண்ட இந்த ஒருநாள் தொடரை இந்திய மகளிர் 1க்கு 1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளனர். போட்டியில் டாஸ் வென்ற மிதாலி ராஜ், பௌலிங்கை தேர்வு செய்த நிலையில், ஜூலான் கோஸ்வாமி எதிரணியின் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அந்த அணி 157 ரன்களை தாண்ட முடியாமல் செய்தார்.

இதையடுத்து துவக்க வீராங்கனையாக வந்த ஸ்மிரிதி மந்தனா அதிரடியகா 64 பந்துகளில் 80 ரன்களை குவித்தார். இதில் 10 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸ்களும் அடக்கம். இதையடுத்து இந்திய அணி ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 30 ஓவர்களுக்குள்ளாகவே இலக்கை அடைந்து வெற்றியை கண்டது.

இந்நிலையில் இந்த போட்டியில் மந்தனாவின் ஆட்டத்தை பார்த்து வியப்படைந்த பாலிவுட் நடிகை டாப்சி பண்ணு, ஸ்மிரிதியின் ஆட்டம் பார்ப்பதற்கு மிகுந்த உற்சாகத்தை அளித்ததாக தனது டிவிட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் கைதட்டல் எமோஜியையும் பதிந்துள்ளார்.

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0