ஐ.பி.எல். வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன வீரர்கள் யார்?

கொல்கத்தா அணி ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்சை ரூ.15½ கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.

ஐ.பி.எல். வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன வீரர்கள் யார்?

கொல்கத்தா அணி ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்சை ரூ.15½ கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. ஐ.பி.எல். ஏலம் வரலாற்றில் அதிக விலைக்கு விலை போன வெளிநாட்டு வீரர் இவர் தான்.

ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்சை ரூ.15½ கோடிக்கு கொல்கத்தா அணி ஏலத்தில் எடுத்தது. ஐ.பி.எல். ஏலம் வரலாற்றில் அதிக விலைக்கு விலை போன வெளிநாட்டு வீரர் இவர் தான். 

இதற்கு முன்பு இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் 2017-ம் ஆண்டு புனே சூப்பர் ஜெயன்ட் அணிக்காக (தற்போது இந்த அணி இல்லை) ரூ.14½ கோடிக்கு விலை போனதே அதிகபட்சமாக இருந்தது.

ஒட்டுமொத்தத்தில் பார்த்தால் கம்மின்ஸ் 2-வது இடத்தில் இருக்கிறார். இந்திய வீரர் யுவராஜ்சிங் ரூ.16 கோடிக்கு டெல்லி டேர்டெவில்ஸ் அணியால் (தற்போதைய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி) 2015-ம் ஆண்டில் வாங்கப்பட்டதே சாதனை தொகையாக நீடிக்கிறது.