எஞ்சியுள்ள 30 போட்டிகள்.. சிக்கிக்கொண்ட வெளிநாட்டு வீரர்கள்.. ஐபிஎல் 2021ல் இனி என்ன நடக்கும்?

இதையடுத்து தற்போது மொத்தமாக ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேதி அறிவிக்கப்படாமல் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

எஞ்சியுள்ள 30 போட்டிகள்.. சிக்கிக்கொண்ட வெளிநாட்டு வீரர்கள்.. ஐபிஎல் 2021ல் இனி என்ன நடக்கும்?

2021 ஐபிஎல் தொடரில் பல வீரர்களுக்கு வரிசையாக கொரோனா ஏற்பட்டது. டெல்லி, கொல்கத்தா, சென்னை, ஹைதராபாத் அணி வீரர்கள் பலருக்கும் கொரோனா வந்தது.

இதையடுத்து தற்போது மொத்தமாக ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேதி அறிவிக்கப்படாமல் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த தொடரில் இன்னும் 30 போட்டிகள் வரை மீதம் உள்ளது. கிட்டத்தட்ட ஒரு மாத போட்டிகள் நடக்க வேண்டும். இப்படிப்பட்ட நிலையில் தொடர் தேதி அறிவிக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டு இருப்பது நிறைய கேள்விகளை, சந்தேகங்களை எழுப்பி உள்ளது. முக்கியமாக போட்டிகள் எப்போது தொடங்கும், எங்கு நடக்கும் என்று கேள்வி எழுந்துள்ளது.

2021 ஐபிஎல் இனி எப்போது தொடங்கும் என்று அறிவிக்கப்படவில்லை. 1 வாரத்திற்கு பின், தொடங்கப்படலாம். அல்லது கொரோனா அலை ஓய்ந்த பின் தொடர் ஆரம்பிக்கலாம்.

இனி தொடர் தொடங்கினால் ஒரே மைதானத்தில் மட்டுமே நடக்கும். பெரும்பாலும் மும்பையில் மட்டுமே நடக்கும். இதனால் மீதமுள்ள போட்டிகளில் அவ்வளவு சுவாரசியம் இருக்காது.

இந்த தொடருக்கு இன்னொரு சிக்கலும் உள்ளது. டெஸ்ட் சாம்பியன்ஷிப், உலகக் கோப்பை டி 20 தொடர்கள் நடக்க உள்ளதாலும், மற்ற வெளிநாட்டு தொடர்கள் நடக்க உள்ளதாலும், இந்த ஐபிஎல் தொடர் எப்போது தொடங்கும் என்பது கேள்வியாக உள்ளது. மீண்டும் நடக்காமலே கூட போட்டிகள் கைவிடப்படலாம்.

முக்கியமாக வெளிநாட்டு வீரர்கள் பலர் தற்போது இந்தியாவில் சிக்கி உள்ளனர். ஆஸ்திரேலிய வீரர்களுக்கு விமான சேவையும் இல்லை. இதனால் இவர்கள் எல்லோரும் எப்படி, எப்போது திரும்பி போவார்கள் என்று கேள்வி எழுந்துள்ளது.

தற்போது பல அணியில் வீரர்களுக்கு கொரோனா வந்துள்ளதால், எல்லா அணி வீரர்களையும் மொத்தமாக மீண்டும் டெஸ்ட் செய்வார்கள். எல்லோரையும் தனிமைப்படுத்துவார்கள். 

பின்னர் இருக்கிற வீரர்களை வைத்து, தொடரை நடத்தலாமா, வேண்டாமா என்று முடிவு செய்வார்கள், என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.