கொலை மிரட்டல் வருவதாக கவுதம் கம்பீர் புகார்!
சர்வதேச தொலைபேசி எண்ணில் இருந்து தமக்கு கொலை மிரட்டல் வருவதாக டெல்லி காவல்துறையிடம் பாரதிய ஜனதா எம்.பி.யும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான கவுதம் கம்பீர் புகார் அளித்துள்ளார்.

சர்வதேச தொலைபேசி எண்ணில் இருந்து தமக்கு கொலை மிரட்டல் வருவதாக டெல்லி காவல்துறையிடம் பாரதிய ஜனதா எம்.பி.யும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான கவுதம் கம்பீர் புகார் அளித்துள்ளார்.
தொடர்ந்து கொலை மிரட்டல் வருவதால் தனக்கும், தனது குடும்பத்தினருக்கும் காவல்துறையினர் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக கவுதம் காம்பீர் டெல்லி மத்திய மாவட்ட துணை ஆணையர்களுக்கு எழுத்துப்பூர்வமாக புகார் கடிதம் அனுப்பி வைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.