தமிழக வீரர் நடராஜனிடம் சொன்ன சொல்லை காப்பாற்றிய கோலி.. அதிரடி முடிவு!

தமிழ்நாடு விஜய் ஹசாரே கோப்பைக்காக பயிற்சியில் ஈடுபட்டு இருந்தார். இந்த நிலையில் இந்திய அணியில் இவர் இணைய வேண்டும் என்பதற்காக பிசிசிஐ இவரை தமிழக அணியில் இருந்து ரிலீஸ் செய்ய சொல்லி இருக்கிறது.

தமிழக வீரர் நடராஜனிடம் சொன்ன சொல்லை காப்பாற்றிய கோலி.. அதிரடி முடிவு!

தமிழக வீரர் நடராஜனுக்கு இந்திய கேப்டன் கோலி கொடுத்த வாக்கு ஒன்றை தற்போது காப்பாற்றி உள்ளார்.

இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜன் மீண்டும் இணைய உள்ளார். இங்கிலாந்து அணிக்கு டி 20 போட்டியில் இவர் இணைய உள்ளார்.

தமிழ்நாடு விஜய் ஹசாரே கோப்பைக்காக பயிற்சியில் ஈடுபட்டு இருந்தார். இந்த நிலையில் இந்திய அணியில் இவர் இணைய வேண்டும் என்பதற்காக பிசிசிஐ இவரை தமிழக அணியில் இருந்து ரிலீஸ் செய்ய சொல்லி இருக்கிறது.

இதன் மூலம் இந்திய அணியில் நடராஜன் இணைவது உறுதியாகி உள்ளது. இதன் மூலம் தமிழக வீரர் நடராஜனுக்கு இந்திய கேப்டன் கோலி கொடுத்த வாக்கு ஒன்றை தற்போது காப்பாற்றி உள்ளார்.

இந்திய அணியில் நடராஜனுக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுக்கப்படும் என்று கோலி வாக்கு கொடுத்து இருந்தார். தற்போது அந்த வாக்கை கோலி காப்பாற்றி உள்ளார்.

தமிழக வீரர் நடராஜன் குறித்து கேப்டன் கோலி முன்பு அளித்த பேட்டி ஒன்றில், நடராஜன் குறித்து இங்கு குறிப்பிட வேண்டும். மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் நடராஜன் தன்னை நிரூபித்துள்ளார். அவர் மீது பிரஷர் இருந்த சமயத்திலும் கூட தன்னை யார் என்று நிரூபித்து இருக்கிறார்.

அவர் ஆட்டம் வேற லெவலில் இருந்தது. அவர் மிகவும் கட்டுக்கோப்பாக இருந்தார். நடராஜன் மிகவும் கடினமாக உழைக்க கூடிய வீரராக இருக்கிறார். 

அதேபோல் அவர் மிகவும் பணிவான குணம் கொண்டவராக இருக்கிறார். அவருக்கு தான் என்ன செய்கிறோம் என்று தெரிகிறது. அடுத்த வருடம் டி 20 உலகக் கோப்பை நடக்க உள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் நடராஜன் இதே போல ஆடினார் என்றால் சிறப்பாக இருக்கும் என்று கோலி குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் நடராஜனை அடுத்த வருடம் நடக்க உள்ள டி 20 உலகக் கோப்பையில் களமிறக்க கோலி திட்டமிட்டு வருகிறார் என்று தெரிய வருகிறது. 

நடராஜன், பும்ரா, ஷமி ஆகிய மூன்று பேரை கோலி டி 20 உலகக் கோப்பைக்கு கொண்டு செல்ல வாய்ப்புள்ளது என்கிறார்கள். இதன் பொருட்டே நடராஜனுக்கு இந்திய கேப்டன் கோலி கொடுத்த வாக்கை தற்போது காப்பாற்றி உள்ளார்.