அப்பட்டமான ஏமாற்று வேலை.. குழப்பமடைந்த மும்பை அணி.. நேற்று என்ன நடந்தது?

இந்த ஐசிசி டெத் பால் விதி கேள்விக்கு உள்ளாகி உள்ளது. ஏமாற்று வேலையா ஏன் பொல்லார்ட் ஓடிய ரன் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. அவர்தான் அவுட் இல்லையே. 

அப்பட்டமான ஏமாற்று வேலை.. குழப்பமடைந்த மும்பை அணி.. நேற்று என்ன நடந்தது?

நேற்று மும்பை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையில் நடந்த ஐபிஎல் போட்டியில் நடந்த சம்பவம் ஒன்று பெரிய அளவில் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. 

நேற்று பஞ்சாப் மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் பவுலிங் தேர்வு செய்தது.இந்த போட்டியில் அதிரடியாக ஆடிய பாண்டியா 11 பந்தில் 30 ரன்களும், பொல்லார்ட் 20 பந்தில் 47 ரன்களும் எடுத்தனர். 

ரோஹித் ஒரு பக்கம் அதிரடியாக ஆடி 70 ரன்கள் எடுத்தார். 20 ஓவர் முடிவில் மும்பை 191 ரன்கள் எடுத்தது.பஞ்சாப் அணியில் நிக்கோலஸ் பூரான் மட்டும் 44 ரன்கள் எடுத்தார். தோல்வி அடைந்தது மற்ற எல்லா வீரர்களும் வரிசையாக அவுட்டானார்கள். 

இதனால் 20 ஓவரில் வெறும் பஞ்சாப் வெறும் 143 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் பஞ்சாப் அணி போட்ட 17வது ஓவரில் நடந்த சம்பவம் ஒன்று பெரிய அளவில் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. 

இந்த ஓவரை முகமது ஷமி வீசினார். அப்போது பொல்லார்ட் பேட்டிங் செய்து கொண்டு இருந்தார்.ஷமி போட்ட இந்த பந்து பொல்லார்ட் பேடில் பட்டது போல இருந்தது. இதனால் நடுவர் பொல்லார்டுக்கு எல்பிடபிள்யூ அவுட் கொடுத்தார். 

பொல்லார்ட் ஒரு ரன் ஓடுவதற்குள் அவர் எல்பிடபிள்யூ கொடுத்தார். ஆனாலும் பொல்லார்ட் முழுமையாக அந்த ரன்னை ஓடி எடுத்துவிட்டார். அதன்பின் பொல்லார்ட் ரிவ்யூ கேட்டார். டிஆர்எஸ் ரிவ்யூவில் பொல்லார்ட் அவுட் இல்லை. அவரின் பேட்டில்தான் பந்து பட்டது. பேடில் படவில்லை என்று உறுதியானது. 

இதனால் நடுவர் தான் கொடுத்த விக்கெட்டை திரும்ப பெற்றார். ஆனால் இதற்கு பின்தான் சர்ச்சை எழுந்தது. நடுவர் விக்கெட்டை திரும்ப பெற்றாலும், பொல்லார்ட் ஓடிய ஒரு ரன் கணக்கில் கொள்ளப்படவில்லை. பொல்லார்ட் முழுமையாக ரன் ஓடுவதற்குள் விக்கெட் கொடுத்துவிட்ட காரணத்தால் , அவர் டெட் பாலில் ரன் ஓடியதாக அர்த்தம். 

இதனால் அந்த ரன் கணக்கு இல்லை என்று விதி கூறியுள்ளது. அதாவது பொல்லார்ட் விக்கெட் விழவில்லை.அதே சமயம் அவர் எடுத்த ரன்னும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது என்று அறிவிக்கப்பட்டது. 

இந்த ஐசிசி டெத் பால் விதி கேள்விக்கு உள்ளாகி உள்ளது. ஏமாற்று வேலையா ஏன் பொல்லார்ட் ஓடிய ரன் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. அவர்தான் அவுட் இல்லையே. 

அப்படி என்றால் இந்த ரன்னை கணக்கில் எடுத்துக் கொண்டு இருக்க வேண்டுமே என்று கேள்வி எழுப்பி உள்ளனர். ஒரு ரன்னால் உலகக் கோப்பை இறுதி போட்டி முடிவே மாறியது தெரியாதா? அப்படி இருக்கும் போது இது என்ன முட்டாளத்தனமான விதி என்று பலரும் கேட்டு உள்ளனர். 

மும்பை அணியின் ரசிகர்களும் இதே கேள்வியை எழுப்பி உள்ளனர். இது ஏமாற்று வேலை. அந்த ஒரு ரன் மும்பைக்கு வழங்கப்பட்டு இருக்க வேண்டும் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். 

ஐசிசி இந்த விதி குறித்து இன்னும் எதுவும் சொல்லவில்லை. ஆனால் விரைவில் இந்த விதிமுறையை ஐசிசி பரிசீலிக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள.

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
1