சர்வதேச கிரிக்கெட் நேர்முக வர்ணனையாளர் ரொபின் ஜெக்மன் காலமானார்

2012 ஆம் ஆண்டு முதல் புற்றுநோயால் பீடிக்கப்பட்டிருந்த அவர், வீட்டிலேயே உயிரிழந்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் நேர்முக வர்ணனையாளர் ரொபின் ஜெக்மன் காலமானார்

இங்கிலாந்தின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், முன்னணி கிரிக்கெட் நேர்முக வர்ணனையாளருமான ரொபின் ஜெக்மன் காலமானார். 75 வயதுடைய ரொபின் ஜெக்மன்  கிறிஸ்துமஸ் தினத்தில் காலமாகியுள்ளார்.

2012 ஆம் ஆண்டு முதல் புற்றுநோயால் பீடிக்கப்பட்டிருந்த அவர், வீட்டிலேயே உயிரிழந்துள்ளார்.

ரொபின் ஜெக்மன் இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்காக 4 டெஸ்ட் மற்றும் 15 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ளதோடு, உலகின் முன்னணி கிரிக்கெட் போட்டிகள் 399 இல் பங்குபற்றி 1,402 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியுள்ளார்.

குறுகிய காலத்தில் கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வுபெற்ற ஜெக்மன், முன்னணி சர்வதேச கிரிக்கெட் நேர்முக வர்ணனையாளராகக் கடமையாற்றி வந்ததும் குறிப்பிடத்தக்கது.

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0