படித்து படித்து சொன்ன கோலி.. காட்டிக்கொடுத்த ஐபிஎல்!

அணியின் கேப்டன் கே. எல் ராகுல் மட்டும் இந்த தோல்விகளுக்கு காரணம் இல்லை. அணியின் பயிற்சியாளர் கும்ப்ளேவும் பஞ்சாப் தோல்விக்கு முக்கிய காரணம் ஆவார். 

படித்து படித்து சொன்ன கோலி.. காட்டிக்கொடுத்த ஐபிஎல்!
படித்து படித்து சொன்ன கோலி.. காட்டிக்கொடுத்த ஐபிஎல்!

பஞ்சாப் அணியின் பயிற்சியாளர் கும்ப்ளே குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலி வைத்த புகார்கள் எல்லாம் தற்போது உண்மையாகி உள்ளது. 

2020 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணி மிக மோசமாக ஆடி வருகிறது. தொடர் தோல்விகள் காரணமாக பஞ்சாப் அணி மிக மோசமாக திணறி வருகிறது. மொத்தம் 6 போட்டிகள் விளையாடி இருக்கும் பஞ்சாப் 5 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. 

பஞ்சாப் அணியின் கேப்டன் கே. எல் ராகுல் இதனால் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகி உள்ளார். அணியின் கேப்டன் கே. எல் ராகுல் மட்டும் இந்த தோல்விகளுக்கு காரணம் இல்லை. அணியின் பயிற்சியாளர் கும்ப்ளேவும் பஞ்சாப் தோல்விக்கு முக்கிய காரணம் ஆவார். 

பார்ம் அவுட் வீரர்களை அணியில் எடுத்தது, கர்நாடக வீரர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தது, முருகன் அஸ்வின் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்காதது என்று கும்ப்ளே மீது நிறைய புகார்கள் உள்ளது. 

அணியில் கேப்டனை முடிவு எடுக்க விடுவது இல்லை. கும்ப்ளேதான் எல்லா முடிவுகளையும் எடுக்கிறார். இதுதான் பஞ்சாப் அணியின் தோல்விக்கும் முக்கிய காரணம். வீரர்களை சுதந்திரமாக இருக்க கும்ப்ளே விடுவது இல்லை என்று புகார் வைக்கப்பட்டு வருகிறது. 

இதனால பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து கும்ப்ளேவை நீக்க வேண்டும் என்றும் கூட கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது. பஞ்சாப் அணியின் பயிற்சியாளர் கும்ப்ளே குறித்து கோலி சொன்னது இதன் மூலம் ஏறத்தாழ நிஜமாகி உள்ளது. இந்திய கேப்டன் கோலிக்கும் கும்ப்ளேவிற்கும் கடந்த 3 வருடமாக மோதல் நிலவி வருகிறது. 

கும்ப்ளே இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த போதே இந்த மோதல் ஏற்பட்டது.பயிற்சியில் ஏற்பட்ட சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள் மோதலாக உருவெடுத்தது. இது பின் சண்டையாக மாறி கும்ப்ளே இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்தே ராஜினாமா செய்யும் நிலை ஏற்பட்டது. 

அணி தேர்வில் கும்ப்ளே பாகுபாடு காட்டுகிறார். சரியாக பயிற்சி அளிப்பதில்லை. அணிக்குள் அதிகம் ஆதிக்கம் செலுத்த பார்க்கிறார் என்று கும்ப்ளே மீது கோலி கோபம் காட்டினார். கும்ப்ளேவிற்கு எதிராக வரிசையாக கோலி புகார்களை அடுக்கி வந்தார்.

எனக்கும் கேப்டனுக்கும் சரியான உறவு இல்லை. அதனால் பயிற்சியாளர் பதவியில் இருந்து வெளியேறுகிறேன் என்று கும்ப்ளேவும் அப்போதே வெளிப்படையாக குறிப்பிட்டு இருந்தார்.கும்ப்ளேவின் ராஜினாமாவிற்கு கோலிதான் அழுத்தம் கொடுத்தார். கோலிதான் இது தொடர்பாக பிசிசிஐ அமைப்பின் அப்போதைய சிஇஓ ராகுல் ஜோரிக்கு தொடர்ந்து பலமுறை மெயில் அனுப்பினார் என்று தகவல்கள் வந்தது. 

இந்த மெயில்கள் கூட இணையத்தில் கசிந்தது. அப்போதில் இருந்தே கோலி மற்றும் கும்ப்ளே இடையே கடுமையான மோதல் இருந்தது. ஆனால் அப்போது எல்லோரும் கோலிதான் ஈகோ பிடித்து செயல்படுகிறார். கோலி தனக்கு அடிமையாக இருக்கும் பயிற்சியாளரை விரும்புகிறார் என்று விமர்சனங்கள் வைக்கப்பட்டது. 

கோலி மீதுதான் புகார் வைக்கப்பட்டது. ஆனால் என்ன ஆனால் இந்த ஐபிஎல் தொடர் பயிற்சியாளர் கும்பளேவின் உண்மையான திறமை என்ன என்பதை நிரூபித்து உள்ளது. கோலி சொன்னது போல கும்ப்ளே சிறந்த பயிற்சியாளர் கிடையாதோ என்று சந்தேகம் வந்துள்ளது. 

கும்ப்ளேவின் பயிற்சி காரணமாக பஞ்சாப் மோசமாக சொதப்பி வருகிறது. இதன் காரணமாக கோலி சொன்னது உண்மைதான், கும்ப்ளே அணிக்குள் நிறைய அழுத்தம் கொடுத்து, தவறான முடிவுகளை எடுக்கிறார் என்று ஏறத்தாழ ஊர்ஜிதம் ஆகியுள்ளது.

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0