முக்கிய பந்துவீச்சாளருக்கு நேர்ந்த பகீர் சம்பவம்.. ஷாக்கில் இந்திய அணி.. என்னாச்சு?

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில்மிக மோசமாக ஆடி தோல்வி அடைந்துள்ளது. இந்திய அணியின் தோல்வி காரணமாக பல வீரர்கள் மீது பிசிசிஐ கோபத்தில் உள்ளது.

முக்கிய பந்துவீச்சாளருக்கு நேர்ந்த பகீர் சம்பவம்.. ஷாக்கில் இந்திய அணி.. என்னாச்சு?

இந்திய அணியின் மிக முக்கியமான பந்துவீச்சாளர்களில் ஒருவரான முகமது ஷமிக்கு கையில் பெரிய அளவில் காயம் ஏற்பட்டுள்ளதாக கூறுகிறார்கள்.

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான கிரிக்கெட் தொடர் தற்போது நடந்து வருகிறது. ஒருநாள் மற்றும் டி 20 தொடர்கள் முடிந்துள்ள நிலையில் தற்போது டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில்மிக மோசமாக ஆடி தோல்வி அடைந்துள்ளது. இந்திய அணியின் தோல்வி காரணமாக பல வீரர்கள் மீது பிசிசிஐ கோபத்தில் உள்ளது.

இந்த நிலையில் இந்திய அணியின் முகமது ஷமிக்கு கையில் பெரிய அளவில் காயம் ஏற்பட்டுள்ளதாக கூறுகிறார்கள். இவரின் கையில் இருக்கும் எலும்பில் சின்ன முறிவு ஏற்பட்டுள்ளது என்று கூறுகிறார்கள். இதனால் இவர் டெஸ்ட் தொடரில் இருந்து நீக்கப்படுவார் என்றும் கூறுகிறார்கள்.

இவர் மீதம் இருக்கும் டெஸ்ட் போட்டிகளில் எடுக்கப்பட மாட்டார் என்றும் கூறப்படுகிறது. இந்திய அணியில் மூத்த பவுலர்கள் இஷாந்த் சர்மா, புவனேஷ்வர்குமார் ஆகியோர் ஏற்கனவே காயம் காரணமாக ஆடவில்லை. இந்த நிலையில் இன்னொரு மூத்த பவுலர் இப்படி காயம் அடைந்து இருப்பது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

ஷமி பேட்டிங் செய்த போது இவரின் கையில் காயம் ஏற்பட்டது. இதில் மணிக்கட்டில் பலத்த அடிபட்டது. இதில் மணிக்கட்டு பகுதியில் பெரிய பாதிப்பு இருக்கலாம் என்று கருதப்பட்டதால் அவருக்கு உடனே ஸ்கேன் எடுக்கப்பட்டது.

இந்த ஸ்கேன் முடிவில் ஷமியின் மணிக்கட்டு உடைந்து போனது கண்டுபிடிக்கப்பட்டது. மணிக்கட்டில் ஒரு எலும்பு பகுதி உடைந்து உள்ளது. இதனால் இன்னும் பல நாட்கள் ஷமி ஓய்வு எடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறார்.

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0