பிரபல கால்பந்து வீரரின் சகோதரர் இரவு விடுதியில் சுட்டுக்கொலை

இவரது இளைய சசோதரர் கிறிஸ்டோபர். இவர் பிரான்ஸ் டவுலஸில் உள்ள ரோடியோ என்ற உள்ளூர் அணிக்காக விளையாடி வந்தார்.

பிரபல கால்பந்து வீரரின் சகோதரர் இரவு விடுதியில் சுட்டுக்கொலை

ஐவர் கோஸ்ட் நாட்டின் கால்பந்து அணியின் கேப்டனாக இருப்பவர் செர்ஜ் ஆரியர். இவர் இங்கிலீஷ் பிரிமீயர் லீக்கின் டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணிக்காக விளையாடி வருகிறது. 

இவரது இளைய சசோதரர் கிறிஸ்டோபர். இவர் பிரான்ஸ் டவுலஸில் உள்ள ரோடியோ என்ற உள்ளூர் அணிக்காக விளையாடி வந்தார்.

இவர் இன்று அதிகாலை இரவு விடுதி ஒன்றில் மர்ம நபரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். போலீசார் கொலை செய்த நபர்களை தேடிவருகின்றனர்.

2017-ல் பாரிஸ் ஜெயின்ட் ஜெர்மைன் அணியில் இருந்து டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணிக்கு செர்ஜ் ஆரியர் மாறினார். இவரது சகோதரர் மறைவுக்கு டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணி இரங்கலை தெரிவித்துள்ளார்.