'எங்க போனீங்க தலைவா'..  இதைக் கேட்டால்  அவரே கண் கலங்கிடுவார் போல

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், இந்திய அணி ஜடேஜாவை மிஸ் செய்வதாக ரசிகர்கள் அதிகம் ட்வீட் செய்து வருகின்றனர்.

'எங்க போனீங்க தலைவா'..  இதைக் கேட்டால்  அவரே கண் கலங்கிடுவார் போல

கடந்த நான்கு நாட்களாக சென்னை மண், இந்திய கிரிக்கெட் வீரர்களை படாதபாடு படுத்தி வருகிறது. இங்கிலாந்து அணி, 

கோலி & கோ-வை இவ்வளவு சோதிக்கும் என்று இங்கிலாந்தே நம்பியிருக்காது. டாஸ் வென்றது முதல் நான்காம் நாள் ஆட்டம் வரை 'என்ன ஆகப் போறாங்களோ' என்றே ரசிகர்களை புலம்ப வைத்து அதை அப்படியே மெயின்டெய்ன் செய்தும் வருகின்றனர் இந்திய வீரர்கள்.

முதல் இன்னிங்ஸில் 578 ரன்கள் குவித்திருக்கிறது இங்கிலாந்து. அதுவும் சென்னையில். அடிக்கும் வெயிலை மீறி, சுழற்றும் இந்திய விரல்களின் பந்துகளை ஓவர்கம் செய்து இத்தனை ரன்கள் அடித்துள்ளனர் என்றால், ஒன்று நமது பவுலிங் மோசமாக இருந்திருக்க வேண்டும் இல்லை இங்கிலாந்து அவ்வளவு சிறப்பாக பேட்டிங் செய்திருக்க வேண்டும். அதேசமயம், மூன்றாவது காரணம் பிட்ச் தன்மை.

இதில், இந்தியா பெரியளவில் தடுமாறியது மூன்றாவது காரணத்தினால் தான். சேப்பாக் பிட்ச் முதல் நாளில் வேகம், ஸ்பின் என எதற்கும் பெரிதாக ரியாக்ட் செய்யவில்லை. பேட் அதிகம் பந்துகளை முத்தமிடவே அனுமதித்தது. இங்கிலாந்தும் 578-ஐ போர்டில் போட்டது.

எனினும், இங்கிலாந்து ஸீமர்களுக்கும் சரி, ஸ்பின்னர்களுக்கும் சரி பிட்ச் கண்டிஷன் சப்போர்ட் செய்தது. காரணம், பிட்சில் போடப்பட்டிருந்த செம்மண், Flat டிராக்காக இருந்து பிறகு ஸ்பின்னுக்கு சப்போர்ட் செய்யும் வகையில் உருமாறியது. சேப்பாக் பிட்சின் இயல்பான குணாதிசயம் கடைசி இரண்டு நாட்கள் ஸ்பின்னுக்கு ஒத்துழைப்பதே.

அதேசமயம், முதல் இன்னிங்ஸில் இந்திய பவுலிங் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம் என்பதே ரசிகர்களின் கருத்தாக உள்ளது. குறிப்பாக, லெஃப்ட் ஆர்ம் ஸ்பின்னர் கம் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா இல்லாததால் தான் இந்தியா இவ்வளவு ரன்களை விட்டுக் கொடுக்க நேரிட்டது என்று பதிவிட்டு வருகின்றனர்.

ஆம்! உண்மையில் ஜடேஜா இல்லாதது இந்தியாவுக்கு இழப்பு தான். அவரைப் போன்ற ஒரு ஆர்தடாக்ஸ் இடது கை ஸ்பின்னர் இருந்திருந்தால், இங்கிலாந்து திணறியிருக்கலாம். அதுவும், இந்திய பிட்ச்களில் அவரது ஸ்லோ டர்ன் பந்துகள், இங்கிலாந்தை சோதித்திருக்கும்.

ஆஸ்திரேலிய தொடரில் கட்டை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்தியா திரும்பிய ஜடேஜா, அறுவைசிகிச்சை மேற்கொண்டு ஓய்வில் உள்ளார். அவர் மீண்டும் களத்திற்கு திரும்ப சிறிது காலம் ஆகலாம். ஆனால், கண்டிப்பாக அது இங்கிலாந்து தொடரில் நிகழாது.

தற்போது 420 ரன்கள் இலக்கை நோக்கி ஆடி வரும் இந்தியா, ரோஹித் விக்கெட்டை பறிகொடுத்துள்ளது. நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் 39 ரன்களுக்கு 1 விக்கெட்டை இழந்துள்ளது.