கவாஸ்கரின் 1970 சாதனையை முறியடித்த இளம் வீரருக்கு குவியும் பாராட்டுக்கள்

இந்த போட்டியின் துவக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கி விளையாடிய நிலையில் ரிஷப் பந்த் 7 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். 

கவாஸ்கரின் 1970 சாதனையை முறியடித்த இளம் வீரருக்கு குவியும் பாராட்டுக்கள்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான இறுதி நாள் ஆட்டத்தில் இந்தியா வெற்றிப்பெற்றது.

இன்றைய ஆட்டத்தில் துவக்க வீரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் முறையே 7 மற்றும் 91 ரன்களை அடித்துள்ளனர்.

இந்த போட்டியின் துவக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கி விளையாடிய நிலையில் ரிஷப் பந்த் 7 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். 

ஆனால் துவக்க வீரராக களமிறங்கிய சுப்மன் கில் 91 ரன்களை அடித்து அதகளம் செய்தார். சதமடிக்காவிட்டாலும் அவரது இந்த ஸ்கோர் மூலம் இந்திய அணி சரியான துவக்கத்தை பெற்றது.

இந்நிலையில், 4வது இன்னிங்சில் 50 ரன்களுக்கு மேல் குவித்துள்ள இளம் துவக்க வீரர் என்ற பெருமை சுப்மன் கில்லிற்கு கிடைத்துள்ளது. 

அவர் 21 வயது மற்றும் 133 நாட்களில் இந்த சாதனையை புரிந்துள்ளார். முன்னதாக கடந்த 1970-71ல் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தன்னுடைய முதல் போட்டியில் தன்னுடைய 21 வயது மற்றும் 243 நாட்களில் இந்த சாதனையை செய்திருந்தார்.

சுனில் கவாஸ்கரின் இந்த சாதனையைதான் தற்போது சுப்மன் கில் முறியடித்துள்ளார். சுப்மன் கில் இந்த சாதனையை தன்னுடைய 3வது டெஸ்ட் போட்டியில் மேற்கொண்டுள்ளார்.

இது கில்லின் இரண்டாவது அரைசதமாகும். 146 பந்துகளில் அவர் இந்த 91 ரன்களை இன்றைய போட்டியில் அடித்துள்ளார்.