22 ஆண்டு கால சாதனையை முறியடிப்பாரா ரோஹித் சர்மா? 

இலங்கையின் ஜெயசூர்யா தன்னிடத்தே 22 ஆண்டுகளாக தக்கவைத்துள்ள சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு இந்தியாவின் ஹிட்மேன் ரோஹித் சர்மாவுக்கு தற்போது கிடைத்துள்ளது.

22 ஆண்டு கால சாதனையை முறியடிப்பாரா ரோஹித் சர்மா? 

இந்தியா, மே.இந்தியத் தீவுகளுக்கு இடையேயான மூன்றாவது ஒரு நாள் போட்டி இன்று கட்டாக்கில் நடைபெறுகின்றது.

3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இரு அணிகளும் 1-1 என்ற சமநிலையுடன் இருக்கிறது.  தொடரைக் கைப்பற்றப் போவது யார் என்பதை முடிவு செய்யும் ஆட்டமாக இன்று நடக்கும் ஒருநாள் போட்டி அமைகின்றது.

அதோடு இலங்கையின் ஜெயசூர்யா தன்னிடத்தே 22 ஆண்டுகளாக தக்கவைத்துள்ள சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு இந்தியாவின் ஹிட்மேன் ரோஹித் சர்மாவுக்கு தற்போது கிடைத்துள்ளது.

இந்த வருடத்திற்கு இன்னும் 9 நாட்களே இருக்கும் சமயத்தில் இந்த வாய்ப்பை ரோஹித் சர்மா நழுவ விட்டால் இந்த சாதனையை முறியடிக்க அடுத்த வருடம் வரைக் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் இந்த வருடத்தின் இறுதி ஒரு நாள் போட்டியாகவும் இந்தப் போட்டி இருக்கிறது. 

1997ம் ஆண்டில் ஒரு நாள் போட்டியில் மட்டும் மொத்தமாக 2,387 ரன்களைக் குவித்ததே இலங்கையைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யாவின் சாதனையாக இருந்து வருகிறது. 

உலகில் எந்த ஒரு அணி வீரரும் ஒரே வருடத்தில் ஒரு நாள் போட்டியில் இத்தனை ரன்களைக் குவித்ததில்லை. தற்போது, இந்தச் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு 22 ஆண்டுகளுக்குப் பிறகு ரோஹித் சர்மாவுக்கு எட்டியுள்ளது.

2019ம் ஆண்டில் ஒரு நாள் போட்டியில் மட்டும் 2,379 ரன்களை ரோஹித் சர்மா இதுவரையில் குவித்துள்ளார். மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான, இன்று நடைப்பெறும் மூன்றாவது ஒரு நாள் போட்டியில் இன்னும் 9 ரன்களை மட்டும் ரோஹித் சர்மா எடுத்து விட்டால் ஜெயசூர்யாவின் இத்தனை ஆண்டு கால சாதனையை ரோஹித் சர்மா முறியடித்து விடுவார். 

அதே போல் குல்தீப் யாதவ் இன்றைய போட்டியில் 1 விக்கெட்டைக் கைப்பற்றினால்  ஒருநாள் போட்டியில் அதிவேகமாக 100 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இந்திய வீரர் என்ற சாதனைகளுக்குச் சொந்தக்காரர் ஆகிவிடுவார். இன்றைய போட்டியில் இரு சாதனைகளை முறியடிக்கப்படுவதற்காக காத்திருக்கின்றன.