பின்வாங்கிய ஆஸி. நிர்வாகம்.. சிட்னிக்கு "மொத்தமாக" பறந்த இந்திய அணி.. மாஸ்!

ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்தின் நேரடி அழுத்தத்தின் பெயரில் இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். இதனால் ரோஹித் உட்பட இந்த 5 வீரர்களும் அடுத்த டெஸ்ட் போட்டியில் ஆட அனுமதிக்கப்படுவார்களா என்று கேள்வி எழுந்தது.

பின்வாங்கிய ஆஸி. நிர்வாகம்.. சிட்னிக்கு "மொத்தமாக" பறந்த இந்திய அணி.. மாஸ்!

ஆஸ்திரேலியாவில் தனிமைப்படுத்தப்பட்ட இந்திய வீரர்கள் உட்பட எல்லோரையும் சிட்னி செல்ல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அனுமதி அளித்துள்ளது.

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான கிரிக்கெட் தொடர் தீவிரமாக நடந்து வருகிறது. இரண்டு அணிகளில் எந்த அணி டெஸ்ட் தொடரை வெல்லும் என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் கொரோனா விதிகளை மீறியதாக கூறி ரோஹித் சர்மா, பண்ட், சுப்மான் கில், பிரித்வி ஷா, சைனி ஆகிய ஐந்து இந்திய வீரர்களும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டனர். இந்த விஷயம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

இவர்கள் 5 பேரும் பயோ பபுளை மீறி இவர்கள் ஹோட்டலில் உணவு உட்கொண்டதற்காகவும், அங்கு ரசிகர் ஒருவரை கட்டிபிடித்ததற்காகவும் தனிமைப்படுத்தப்பட்டனர். 

ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்தின் நேரடி அழுத்தத்தின் பெயரில் இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். இதனால் ரோஹித் உட்பட இந்த 5 வீரர்களும் அடுத்த டெஸ்ட் போட்டியில் ஆட அனுமதிக்கப்படுவார்களா என்று கேள்வி எழுந்தது.

அதாவது இந்த 5 பேரும் சிட்னிக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்களா என்று கேள்வி எழுந்தது. ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் இவர்களை பயணம் செய்ய விடாமல் தடுத்து விடுமோ என்று கேள்வி எழுந்தது. இந்த நிலையில் தற்போது இவர்கள் 5 பேரும் சிட்னி செல்ல அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

ரோஹித் சர்மா உள்ளிட்ட 5 வீரர்களும், மற்ற இந்திய அணி வீரர்களும் ஒன்றாக பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் இவர்கள் ஒரே விமானத்தில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களை ஆஸ்திரேலிய அணி கட்டுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆஸ்திரேலிய அணி எதுவும் செய்யாமல் பின்வாங்கி உள்ளது.

இந்திய வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டதை பிசிசிஐ கடுமையாக எதிர்த்து இருந்தது. ஆஸ்திரேலிய அணி நிர்வாகிகளை பிசிசிஐ இதற்காக கடுமையாக எதிர்த்து இருந்தது. பிசிசிஐ இது குறித்து ஆஸ்திரேலிய அணிக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தது.

இந்த நிலையில் தற்போது இந்திய வீரர்களை ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் சிட்னி செல்ல அனுமதித்துள்ளது. மேற்கொண்ட பிரச்சனையை வேண்டாம் என்று ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் இந்த முடிவை எடுத்து இருக்கலாம் என்கிறார்கள். இதனால் அடுத்த போட்டியில் இந்திய அணி வீரர்கள் எல்லோரும் அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.