இவருக்கு தகுதி இல்லை.. பொங்கி எழுந்த கவாஸ்கர்.. சரமாரி விளாசல்!

இந்திய வீரர்கள் முகமது சிராஜ், பும்ரா ஆகியோர் தாங்கள் இனவெறி ரீதியாக ரசிகர்களால் பேசப்பட்டதாக புகார் கூறினர்.

இவருக்கு தகுதி இல்லை.. பொங்கி எழுந்த கவாஸ்கர்.. சரமாரி விளாசல்!

ஆஸ்திரேலிய அணி கேப்டன் டிம் பெயினை கடந்த சில நாட்களாக கரம் வைத்து விமர்சனம் செய்து வருகிறார் சுனில் கவாஸ்கர்.

குறிப்பாக, ஆஸ்திரேலியா, இந்திய வீரர்களை குறி வைத்து சர்ச்சைகளை கிளப்பியது முதல் இந்திய அணி வீரர்கள் சார்பாக பேசி வரும் கவாஸ்கர் ஆஸ்திரேலிய அணி கேப்டனை விமர்சனம் செய்து அவருக்கு குடைச்சலை கொடுத்து வருகிறார்.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன டெஸ்ட் தொடர் என்றாலே சர்ச்சைகளுக்கு பஞ்சம் இருக்காது. இந்த முறையும் அப்படி பரபரப்பு கிளம்பியது. இந்திய அணி வீரர்கள் பாதுகாப்பு வளைய விதிமுறைகளை பின்பற்றவில்லை என ஆஸ்திரேலிய ஊடகங்கள் குற்றம் சுமத்தின.

இந்திய வீரர்கள் முகமது சிராஜ், பும்ரா ஆகியோர் தாங்கள் இனவெறி ரீதியாக ரசிகர்களால் பேசப்பட்டதாக புகார் கூறினர். இதை அடுத்து இரு தரப்பிலும் பரபரப்பு எகிறியது. இதற்கிடையே, மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டிரா செய்ய போராடிய சீண்டிக் கொண்டே இருந்தார் ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெயின்.

சில தவறான வார்த்தைகளை டிம் பெயின் பயன்படுத்தியது பெரும் சர்ச்சை ஆனது. இந்த நிலையில், சுனில் கவாஸ்கர் டிம் பெயினை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். தற்போது டிம் பெயின் ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டனாக இருக்கவே தகுதி இல்லாதவர் என கூறி உள்ளார்.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்ய வைக்காமல், ஆஸ்திரேலியா பேட்டிங் செய்ததே தோல்விக்கு காரணம் அதே போல, மூன்றாவது டெஸ்ட் போட்டியில் கடைசி நாள் ஆட்டத்தில் பந்துவீச்சு மாற்றம், பீல்டிங் நிறுத்தம் ஆகியவற்றில் அவர் சொதப்பியதாகவும் சுட்டிக் காட்டினார் கவாஸ்கர்.

மேலும், 2019 ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஹெடிங்லே போட்டியில் கடைசி விக்கெட்டுக்கு இங்கிலாந்து அணியை 86 ரன்கள் கூட்டணி சேர்க்க அவர் விட்டுக் கொடுத்தார். எனவே, அவர் ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டனாக இருக்க தகுதி கொண்டவர் அல்ல என தான் கருதுவாக கூறி உள்ளார் கவாஸ்கர்.