விராட் கோலியை எப்படி அவுட் ஆக்கப்போறோம்னு தெரியலை... மொயீன் அலி கவலை!

வரும் 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் விராட் கோலியை இங்கிலாந்து அணி எவ்வாறு அவுட் செய்யப் போகிறது என்பது குறித்து தெரியவில்லை என்றும் விராட் கோலிக்கு எந்தவிதமான வீக்னசும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விராட் கோலியை எப்படி அவுட் ஆக்கப்போறோம்னு தெரியலை... மொயீன் அலி கவலை!

விராட் கோலி அற்புதமான வீரர் என்றும் சர்வதேச அளவில் சிறப்பானவர் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடும்வகையில் தன்னை உத்வேகப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் மொயீன் அலி பாராட்டு தெரிவித்துள்ளார். 

வரும் 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் விராட் கோலியை இங்கிலாந்து அணி எவ்வாறு அவுட் செய்யப் போகிறது என்பது குறித்து தெரியவில்லை என்றும் விராட் கோலிக்கு எந்தவிதமான வீக்னசும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

ஆனால் தங்களிடம் சிறப்பான பௌலர்களை கொண்ட பௌலிங் யூனிட் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், விராட் கோலி மிகவும் சிறப்பான வீரர் என்றும் தன்னுடைய சிறந்த நண்பர் என்றும் தெரிவித்தார். 

ஆனாலும் இருவரும் கிரிக்கெட் குறித்து அதிகமாக பேசியதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவுடன் டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக தான் காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0